ஆனிமாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகிற 14-ல் திறப்பு 

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகிற 14-ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 
ஆனிமாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகிற 14-ல் திறப்பு 

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகிற 14-ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 

ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களில் கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும் இதையொட்டி அதற்கு முந்தைய நாள் மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுவது வழக்கம். 

அதன்படி ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகிற 14-ம் தேதி திறக்கப்படுகிறது. தந்திரி மனுநம்பூதிரி முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. 15-ம் முதல் 19-ம் தேதி வரை 5 நாட்கள் நெய் அபிஷேகம் நடைபெறும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com