/

அத்திவரதர் வைபவம் மேலும் 48 நாட்கள் நீட்டிக்கப்படுமா?

அத்திவரதர் வைபவத்தின் 44-ம் நாளான இன்று பச்சை மற்றும் ஆரஞ்சு எனப் பல வண்ணப்பட்டு உடுத்தியும், மலர்..

News image
Updated On :13 ஆகஸ்ட் 2019, 7:07 am

தினமணி

அத்திவரதர் வைபவத்தின் 44-ம் நாளான இன்று பச்சை மற்றும் ஆரஞ்சு எனப் பல வண்ணப்பட்டு உடுத்தியும், மலர் மாலைகள் அணிந்தும் பக்தர்களுக்குக் காட்சியளித்து  வருகிறார். 

காஞ்சிபுரம் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 31 நாட்கள் சயன கோலத்திலும், 13 நாட்களாக நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு  அருள்பாலித்து வருகிறார். 

கடந்த 43 நாட்களில் இதுவரை 90 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இன்று காலை தற்போது வரை 50 ஆயிரம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து  சென்றுள்ளனர். மேலும், 3 லட்சம் பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனத்துக்காகக் காத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றது. 

அத்திவரதர் பெருவிழா தினமும் லட்சக்கணக்கானோர் வருகின்றனர். கடந்த சனி, ஞாயிறு, பக்ரீத் எனத் தொடர்ந்து விடுமுறையாக வந்ததால் சுமார் 5 லட்சத்துக்கும்  மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

Story image

அத்திவரதர் தரிசனம் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் 16-ம் தேதி இரவுடன் நிறைவுபெற உள்ளது. ஆகஸ்ட் 17-ம் தேதி ஆகம விதிப்படி அத்திவரதருக்கு பூஜைகள் செய்யப்பட்டு அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா நேற்று தெரிவித்தார். 

இதையடுத்து, தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்கவரும் நிலையில், அத்திவரதர் வைபவத்தை மேலும் 48 நாட்கள் நீடிக்கக் கோரி மனுதாரர் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அத்திவரதர் வைபவம் தொடர்பாக மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி ஆதிகேசவலு அமர்வு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்னதான் நடக்கிறது என்று பொறுந்திருந்து பார்ப்போம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.