
புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு 1008 பால் குடம்: பக்தர்கள் நேர்த்திக்கடன்!
பால் குடம் எடுத்து வழிபாடு செய்தது பற்றி..

பால் குடம்
பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு 1008 பிராமணர்கள் பால் குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.
தஞ்சாவூரை அடுத்த புன்னைநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள அம்மன் புற்று மண்ணால் ஆனது. அபிஷேகம் எதுவும் நடைபெறாது.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தைலாபிஷேகம் மட்டுமே நடைபெறும். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் பிராமணர்கள் சங்கம் சார்பில் பால்குட திருவிழா நடைபெற்றது. தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா பகுதியில் இருந்து 1008 பால் குடம் ஊர்வலம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலைச் சென்று அடைந்தனர். அதனைத்தொடர்ந்து புன்னைநல்லூர் உற்சவ மாரியம்மனுக்கு 1008 பால் குடங்கள் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்று பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த பிராமண சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆண்டுதோறும் தஞ்சாவூர் புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் பிராமணாள் கைங்கர்ய டிரஸ்ட் சார்பில் 1008 குடங்கள் பாலாபிஷேகம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
1,008 Brahmins offered worship to the renowned Punnainallur Mariamman by carrying pots of milk.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







