பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்! பாதுகாப்புப் பணியில் 6,000 காவலர்கள்!!

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின்போது பாதுகாப்புப் பணியில் 6,000 காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

Published On :

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மதுரை மாநகரில் பாதுகாப்புப் பணியில் 6,000 காவலர்கள் ஈடுபடுத்தப்படவிருக்கிறார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் 6,000 காவலர்கள் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

பக்தர்களின் வசதிக்காக மதுரை மாநகர் முழுவதும் 1,000 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கும்பாபிஷேகம் நிறைவடைந்த பின்னர் ஒரே நேரத்தில் அதிகளவில் பக்தர்கள் கோவில் வளாகத்தில் இருந்து வெளியேறாத வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்.

கோவில் மேல் தளத்திற்கு செல்லும் பக்தர்களுக்காக 2,000 பாஸ்கள் வழங்கப்பட உள்ளது.

மேலும், செப்டம்பர் 17-ம் தேதி மதுரை மாநகர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். இதற்கான அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிடும். செப்டம்பர் 16-ம் தேதியும் மாநகரப் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும்.

இதனிடையே, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அறநிலையத்துறை சார்பில் கூடுதல் ஆணையர்கள் ஜெயராமன் மற்றும் மாரிமுத்து தலைமையில் 198 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினருக்கு கும்பாபிஷேக முன்னேற்பாடு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.