ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான உத்தேச விடைக்க்குறிப்பு வெளியீடு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!மதுவுக்கு கூடுதல் கட்டணம்: விசாரணை நடத்தாமல் பணிநீக்கம் கூடாது - உயர் நீதிமன்றம்

வேறெங்கும் காண முடியாத திருக்கோலம்… விருச்சிக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய திருத்தலம்!

வலது காலை மடித்து அருள்பாலிக்கும் அபூர்வப் பெருமாள் திருக்கோயில்.

Scorpio sign should visit

நீலமேகப் பெருமாள் திருக்கோயில் - file photo

Published On :

108 திவ்ய தேசங்களில் 20-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது நிலமேகப் பெருமாள் திருக்கோயில். இத்திருக்கோயில், திருமங்கை ஆழ்வார் மற்றும் பூதத்தாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியது.

தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரையில் மாமணி கோயில் என்று அழைக்கப்படும் மூன்று கோயில்களில் பெருமாள் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். செங்கமலவல்லித் தாயார் உடனுறை நீலமேகப் பெருமாள் கோயில், அம்புஜவல்லித் தாயார் உடனுறை மணிகுன்றப் பெருமாள் கோயில், தஞ்சை நாயகித் தாயார் உடனுறை வீரநரசிம்ம பெருமாள் கோயில்.

கோயில் தலவரலாறு

இக்கோயில் வரலாற்றுக்கும் தஞ்சாவூர் என்ற பெயர்க் காரணத்திற்கும் தொடர்புள்ளது. காவிரியிலிருந்து பிரிந்து வரும் வெண்ணாற்றங்கரை, ஒரு காலத்தில் சோலை நிறைந்த பகுதியாகக் காட்சியளித்தது. இங்குப் பராசர மகரிஷி என்பவர் பெருமாளை நோக்கி தவம் செய்து வந்தார். அப்போது தஞ்சாசூரன் - தண்டகாசூரன் என இரண்டு அரக்கர்கள் மகரிஷியை தவம் செய்யவிடாது இன்னல் தருகின்றனர்.

இதனால் வருந்திய மகரிஷி, பெருமாளை நோக்கி முறையிடுகிறார். மகரிஷியின் வேண்டுதலை ஏற்று அவதாரம் எடுத்த பெருமாள் அரக்கர்களை வதம் செய்கிறார். அவ்வாறு வதம் செய்தபோது, தன் தவற்றை உணர்ந்த அரக்கர்கள், இந்த பகுதிக்குத் தனது பெயரை நிலைநிறுத்த வேண்டும் எனப் பெருமாளிடம் வேண்டுதல் வைக்கின்றனர். அதனடிப்படையில் இக்கோயிலுக்குத் தஞ்சாவூர் என்ற பெயர் வந்தது.

Story image

கோயில் சிறப்பு

இத்தகைய சிறப்புமிக்க இக்கோயிலில் பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவி உடன் அமர்ந்த கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். மற்ற ஆலயங்களில் பெருமாள் அமர்ந்த நிலையில் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்ட நிலையில் இருப்பார். ஆனால், இங்கு மட்டுமே வலது காலை மடக்கி இடது காலை தொங்கவிட்ட நிலையில் காட்சி தருகிறார். இது வேறு எங்கும் காணக் கிடைக்காத சிறப்பாகும். இத்தலத்தில் பஞ்ச நரசிம்மர்கள் அருள்பாலிக்கின்றனர்.

Story image

மற்ற ஆலயங்களில் பெருமாளுக்கு உற்சவம் நடைபெறும். ஆனால், இங்கு மட்டுமே ஆச்சாரியருக்கு உற்சவம் நடைபெறுகிறது. பெருமாள் இங்கு மட்டுமே ஆண்டாளுடன் ஆண்டுக்கு நான்கு முறை கருட வாகனத்தில் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.

விருச்சிக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்

இத்திருத்தலத்தில் மகிழ மரம் தல விருட்சமாக உள்ளது. மகிழ மரம் அனுசத்திற்கு உண்டானது. எனவே விருச்சிக ராசிக்காரர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

Story image

தோஷ நிவர்த்தி தலம்

நீலமேகப் பெருமாள் என்ற நாமத்துடன் பெருமாள் காட்சியளிப்பதால் இங்கு நீல வண்ண உடை சாத்தி பெருமாளை வணங்கினால் திருமணத்தடை, புத்திர தோஷம், பித்ரு தோஷம் ஆகியவை நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

Story image

எப்படிச் செல்லலாம்?

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து, கும்பகோணம் - திருவையாறு செல்லும் சாலையில் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். கும்பகோணம், அரியலூர், பெரம்பலூர் பகுதியிலிருந்து வரும் பக்தர்கள் பள்ளி அக்ரஹாரம் என்ற இடத்திற்கு வந்து அங்கிருந்து இத்திருக்கோயிலை வந்தடைய முடியும்.

கோயில் திறந்திருக்கும் நேரம்

காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER