மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) மசோதா, 2019! இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்!!

வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா பற்றிய விவரங்கள்..

Motherhood

வாடகைத் தாய் - பிரதி படம் - File photo

Published On :

வாடகைத்தாய் ஒழுங்குப்படுத்தும் சட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்ன தெரியுமா?


பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தம்பதிகளுக்கு இந்தியா வாடகைத் தாய்களின் இருப்பிடமாக உருவாகி இருப்பதுடன், பண்புநெறியற்ற நடைமுறைகள், வாடகைத் தாய்கள் ஏமாற்றப்படுதல், வாடகைத் தாய்கள் மூலம் குழந்தைகளை கைவிடுதல் மற்றும் மனித கருவின் ஆரம்ப நிலை மற்றும் கருப்பைகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் இடைத்தரகர்களின் மோசடிகள் போன்று பல சம்பவங்கள் நடைபெறுவதாக கூறப்படுகின்றன.

கடந்த சில வருடங்களாக, பல்வேறு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் இந்தியாவில் உள்ள வணிகரீதியான வாடகைத் தாய் அமர்த்துவது குறித்து பரவலாக கண்டனம் தெரிவிக்கப்படுவதோடு, வணிகரீதியான வாடகைத் தாய் தடை செய்யப்பட வேண்டும் என்றும் பண்புநெறி சார்ந்த பொதுநல வாடகைத் தாய் அமர்த்துவதை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் முக்கியத்துவம் அளித்து தெரிவித்து வருகின்றன. இந்திய சட்ட ஆணையத்தின் 228வது அறிக்கையிலும், வணிகரீதியான வாடகைத் தாய் தடை செய்யப்பட வேண்டும் என்றும் தேவைப்படும் இந்திய தம்பதிகளுக்கு பண்புநெறி சார்ந்த பொதுநல வாடகைத் தாய் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.


இந்த மசோதா, தேசிய அளவில் தேசிய வாடகைத் தாய் வாரியம் மற்றும் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளவில், மாநில வாடகைத் தாய் வாரியங்கள் மற்றும் தக்க அமைப்புகளை ஏற்படுத்தி, இந்தியாவில் வாடகைத் தாய் பயன்படுத்துவதை ஒழுங்குப்படுத்தும்.


இதன் மூலம் பண்புநெறி சார்ந்த வாடகைத்தாய் அமர்த்த விரும்பும் திருமணமாகி குழந்தையற்ற அனைத்து தம்பதிகளும் பயனடைவார்கள். மேலும், வாடகைத் தாய்கள் மற்றும் அதன் மூலம் பிறந்த குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.


நாடாளுமன்ற மக்களவையில் வாடகைத்தாய் முறையை ஒழுங்குப்படுத்துவது தொடர்பான மசோதா நிறைவேறியது. இந்நிலையில் வாடகைத்தாய் ஒழுங்குப்படுத்தும் சட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்ன என்று தற்போது பார்ப்போம்.....

  • வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெற நினைப்பவர்கள் இந்திய தம்பதிகளாக இருக்க வேண்டும் 

  • தம்பதியரில் ஒருவருக்கு குழந்தை பெற தகுதி இல்லாமல் இருக்க வேண்டும்.

  • வாடகைத்தாய் முறையை பயன்படுத்திக்கொள்ளும் பெண்ணுக்கு 23 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

  • திருமணமாகி குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும் 

  • குழந்தைப்பேறுக்கு வாய்ப்பில்லாதவராக தம்பதியரில் ஒருவர் இருக்க வேண்டும் 

  • நெருங்கிய சொந்தத்தில் இருக்கும் ஒருவரையே வாடகைத் தாயாக தேர்ந்தெடுக்கலாம். 

  • வாடகைத்தாயாக இருப்பவர் அந்த தம்பதிக்கு நெருக்கமான உறவினராக இருக்க வேண்டும். அவரும் திருமணமாகி குழந்தை பெற்றிருக்க வேண்டும்.

  • மருத்துவ செலவை தவிர வேறு எந்த வகையிலும் பணம் வழங்கப்படாது 

  • வியாபார ரீதியில் பணம் கொடுத்து வாடகைத்தாயாக அமர்த்தக்கூடாது. ஆனால், மருத்துவ செலவு, காப்பீட்டு செலவு போன்றவற்றை அவருக்குக் கொடுக்கலாம்.

  • வாடகை தாய்க்கும், சம்பந்தப்பட்ட தம்பதிக்கும் தகுதி சான்றிதழ்கள் வழங்கப்படும்.

  • வாடகைத்தாயாக இருப்பவருக்கு 25-35 வயதுடையவராக இருக்க வேண்டும்.

  • இந்த முறையை ஒழுங்குபடுத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அளவில் வாடகைத் தாய் வாரியம் அமைக்கப்படும்.

  • வாடகைத் தாய் மூலம் பெறப்பட்ட குழந்தைகளை, தம்பதிகள் எக்காரணத்தை கொண்டும் கைவிட்டுவிடக் கூடாது என்று அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

  • ஒரு பெண், ஒரே ஒரு முறை மட்டுமே வாடகைத் தாயாக இருக்க வேண்டும்.

Details about the bill regulating surrogacy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.