மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

தஞ்சை தந்த ஆடற்கலை

தஞ்சை தந்த ஆடற்கலை - முனைவர் சண்முக.செல்வகணபதி, முனைவர் செ.கற்பகம்; பக்.144; ரூ.100; தஞ்சை பெரியகோயில் வார வழிபாட்டு மன்றம், தஞ்சாவூர்-9; )04362-239087. "தமிழிசை இயக்கம் தோன்றி 80 ஆண்டுகள் ஆயினும், தம

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:39 am IST

தஞ்சை தந்த ஆடற்கலை - முனைவர் சண்முக.செல்வகணபதி, முனைவர் செ.கற்பகம்; பக்.144; ரூ.100; தஞ்சை பெரியகோயில் வார வழிபாட்டு மன்றம், தஞ்சாவூர்-9; )04362-239087.

"தமிழிசை இயக்கம் தோன்றி 80 ஆண்டுகள் ஆயினும், தமிழிசை இயக்கத்துக்கு ஆதரவானவர்கள் அரசு கட்டிலேறி நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் தமிழிசை "துக்கடா'வாகவே இருக்கிறது. இந்த நிலையைப் போக்கி "துக்கடா' இசைத் தமிழையும், நாட்டியத்தையும் எடுத்துக்கூறி தமிழ்த்தொண்டாற்றி வருகிறார் சண்முக.செல்வகணபதி' என்கிற சு.கோவிந்தராசனின் அணிந்துரை தமிழிசையின் நிலையை எடுத்துக் கூறுகிறது. இசைத்தமிழ் வளர்ச்சி குறித்த பலரது ஏக்கத்தையும் வருத்தத்தையும் நூலாசிரியர் இருவரும் போக்கியிருக்கிறார்கள். தஞ்சை பெரியகோயிலில் காணப்படும் 81 கரணசிற்பங்களின் (கரணம்-முத்திரை) புகைப்படமும், ஸ்ரீராமதேசிகன் நூலில் காணப்படும் வரைபடங்களும் ஒப்புநோக்கப்பட்டிருக்கின்றன. தஞ்சை தந்த ஆடற்கலை, சோழர், நாயக்கர், மராட்டியர் காலத்தில் இருந்த ஆடற்கலை, கல்வெட்டுக்கூறும் நாட்டிய இசைக்குழு, தஞ்சாவூர் கரணச் சிற்பங்கள், கரணங்களும் அங்ககாரங்களும் - அடைவுவரிசைகளும் என மொத்தம் 9 தலைப்புகளில் இசை மற்றும் நாட்டியத்தைப் பற்றிய அருமையான தகவல்களைப் பதிவு செய்துள்ளனர். இறுதியில் தஞ்சை பெரியகோயிலின் ஆயிரமாண்டு நிறைவு விழா பற்றிய தகவல்கள் அறியப்பட வேண்டியவை. இசைக்கும் நாட்டியத்துக்கும் நூலாசிரியர் இருவரும் செய்திருக்கும் தொண்டு காலத்தால் அழியாதது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.