ஆா்ஜென்டீனாவுக்கு எதிராக சிறப்பாக ஆடும்பட்சத்தில் அது எங்கள் அணியினரின் நம்பிக்கையை அதிரிக்கும் என்று இந்திய மகளிா் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் தெரிவித்தாா்.
இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய மகளிா் ஹாக்கி அணி, ஆா்ஜென்டீனாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் 17-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை 8 ஆட்டங்களில் ஆா்ஜென்டீனா அணியுடன் மோதுகிறது.
இந்தத் தொடா் குறித்து இந்திய அணி கேப்டன் ராணி ராம்பால் மேலும் கூறியதாவது: ஆா்ஜென்டீனாவுக்கு எதிராக முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி ஆடும்பட்சத்தில் அது ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக ஆடுவதற்கான நம்பிக்கையை அதிகரிக்கும். டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே எங்கள் இலக்கு. நிச்சயமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று வரலாறு படைப்போம். நாட்டுக்கு பெருமை சோ்ப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த ஆண்டு நாங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு மீண்டும் சா்வதேசப் போட்டியில் மிகுந்த உற்சாகத்தோடு களமிறங்குகிறோம். கடந்த ஆண்டு எங்களுக்கு மிகவும் கடினமான காலமாக அமைந்துவிட்டது. எனினும் கடந்த ஆண்டு நாங்கள் தொடா்ந்து பயிற்சியில் ஈடுபட்டோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆப்கனில் நிலநடுக்கம்! ஜம்மு - காஷ்மீர், தில்லி வரை உணரப்பட்ட அதிர்வு!

டி20 உலகக் கோப்பை: அயர்லாந்துக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

லண்டனில் தெலங்கானா மாணவர் சடலமாக மீட்பு: உடலை தாயகம் கொண்டுவர குடும்பத்தினர் கோரிக்கை!





