தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்: ஆடவர் டெஸ்டில் முதல்முறையாக பெண் நடுவர்!

ஆடவர் டெஸ்டில் பணியாற்றும் முதல் பெண் நடுவர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்...

News image
Updated On :7 ஜனவரி 2021, 5:32 pm IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்டில் 4-வது நடுவராகப் பணியாற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளார் போலோசாக், ஆடவர் டெஸ்டில் பணியாற்றும் முதல் பெண் நடுவர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.  

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் டிம் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதல் நாளன்று ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில் சிட்னி டெஸ்டில் 4-வது நடுவராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளார் போலோசாக் பணியாற்றுகிறார். இதன்மூலம் ஆடவர் டெஸ்டில் பணியாற்றும் முதல் பெண் நடுவர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். கிளேர் போலோசாக் ஏற்கெனவே, ஆடவருக்கான ஒருநாள் ஆட்டத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் கள நடுவர்.

டெஸ்ட்டுக்கான ஐசிசி விதிகளின் படி, போட்டியை நடத்தும் கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் 4-வது நடுவர் நியமிக்கப்படுகிறார். அவர் ஐசிசி நடுவர்களுக்கான சர்வதேச குழுவில் அங்கம் வகிப்பவராக இருப்பார். 

ஆடுகளத்தில் இரு நடுவர் பணியாற்றுவார்கள். மூன்றாவது நடுவர், டிஆர்எஸ் முறையீடுகள், ரன் அவுட், ஸ்டம்பிங் முறையீடுகள் தொடர்பான பணிகளை மேற்கொள்வார். ஆட்டத்துக்கான புதிய பந்தை வழங்குவது, புதிய பெய்ல்ஸ்களை அளிப்பது, கள நடுவர்களுக்கான இளைப்பாறல் பானங்களை எடுத்து வருவது, லைட் மீட்டர்களின் பேட்டரிகளை சரிபார்ப்பது, மதிய உணவு மற்றும் தேநீர் இடைவேளைகளின்போது ஆடுகளத்தை சரிபார்ப்பது போன்றவை 4-ஆவது நடுவரின் பணியாகும். எதிர்பாராத சூழ்நிலைகளில் கள நடுவரின் பொறுப்புக்கு தொலைக்காட்சி நடுவர் செல்லும் பட்சத்தில், அவரது பொறுப்பை 4-ஆவது நடுவர் ஏற்பார்.

ஆடவர் டெஸ்டில் நடுவராகப் பணியாற்றி வரும் கிளார் போலோசாக்குக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.