மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஒருநாள் ஆட்டத்தை டெஸ்ட் போல விளையாடும் பாகிஸ்தான் வீரர்கள்

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஒருநாள் ஆட்டத்தை டெஸ்ட் போட்டி போல விளையாடுகின்றனர் என்று அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கேலியாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Updated On :11 ஜூன் 2013, 6:35 pm

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஒருநாள் ஆட்டத்தை டெஸ்ட் போட்டி போல விளையாடுகின்றனர் என்று அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கேலியாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்ற இரு ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. இதனால் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவதும் கேள்விக்குறியாகியுள்ளது.

முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பாகிஸ்தான், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் 235 என்ற வெற்றி இலக்கை எட்ட முடியாமல் 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்த ஆட்டத்தில் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் (55 ரன்கள்), நசீர் ஜாம்ஷெட் (42 ரன்கள்) ஆகியோர் மட்டுமே குறிப்பிடத்தக்க ரன்களை எடுத்தனர். முன்வரிசை வீரர்கள் இம்ரான் ஃபர்கத், முகமது ஹஃபீஸ், சோயிப் மாலிக், கம்ரான் அக்மல் ஆகியோர் இரு ஆட்டங்களிலும் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.

வீரர்களின் மோசமான ஆட்டம், அணியின் தொடர் தோல்விகளால் பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பாகிஸ்தான் வீரர்களின் பேட்டிங் குறித்து கருத்துத் தெரிவித்த அந்நாட்டு அணியின் முன்னாள் கேப்டன் ஜாகீர் அப்பாஸ், "பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஒருநாள் போட்டியை டெஸ்ட் போட்டி போலவும், டெஸ்ட் போட்டிகளில் ஒருநாள் ஆட்டத்தைப் போலவும் விளையாடத் தொடங்கியுள்ளனர். பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது அவர்களது பதற்றம் அதிகரிப்பது ஏன் என்பது தெரியவில்லை. சிறந்த பேட்டிங் பயிற்சியாளரை நியமிக்க வேண்டியது அவசியம்' என்றார்.

முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் தெüசிஃப் அகமது கருத்துத் தெரிவிக்கையில், "பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தைரியத்தை இழந்துவிட்டனர். பந்துகளை எதிர்கொண்டு களத்தில் தாக்குப்பிடிக்கவே அவர்கள் சிரமப்படுகின்றனர்'

என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.