சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் பெர்மிங்ஹாமில் புதன்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.
தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்துள்ள ஆஸ்திரேலியாவுக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானதாகும். நியூஸிலாந்து அணி தனது தொடக்க ஆட்டத்தில் இலங்கையை வென்றுள்ளது.
கிளார்க் இல்லை: முதுகில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் இந்த ஆட்டத்திலும் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜார்ஜ் பெய்லி அணிக்கு தலைமை வகிக்கிறார்.
அரையிறுதிச் சுற்றில் இடம் பெறுவதற்கான நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்ள இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது ஆஸ்திரேலியாவுக்கு கட்டாயமாகியுள்ளது.
கடந்த ஆட்டத்தில இங்கிலாந்திடம் ஆஸ்திரேலியா 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியே பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடாததே இதற்கு முக்கியக் காரணமாகும்.
அந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 300 ரன்களுக்கு மேல் எடுக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி 269 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர்.
ஆனால் பேட்ஸ்மேன்கள் வார்னர், மார்ஷ், வடே, வாட்சன் உள்ளிடோர் சிறப்பாக விளையாடாததால் அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 221 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கேப்டன் பெய்லி அதிகபட்சமாக 69 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தும் மற்ற பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாடாததால் வெற்றி கிட்டவில்லை.
நியூஸிலாந்து அணி முதல் ஆட்டத்தில் இலங்கையை 138 ரன்களில் சுருட்டி வெற்றி பெற்றது. எனவே அந்த அணி வீரர்களின் பந்து வீச்சு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை! செய்திகள் நேரலை

எஸ்பிஐ-யின் பயிற்சி நிலை அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு!

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

எனக்குள் வேலி போட அனுமதிக்க மாட்டேன்..! விஜய் நேர்காணல் -1!
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



