பிரான்ஸில் நடைபெற்று வரும் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட இந்திய ஆடவர் அணி தகுதி பெற்றுள்ளது.
போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்திய அணி, பலம் வாய்ந்த ஃபின்லாந்து அணியை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொண்டது.
இந்திய வீரர் ரமீத் டாண்டன், தரவரிசையில் தன்னைவிட 196 இடங்களில் முன்னிலையில் உள்ள ஃபின்லாந்தின் ஹென்றிக் மஸ்டோனியை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் மஸ்டோனி எளிதில் வென்றுவிடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ரமீத் டாண்டன் ஆக்ரோஷமாக விளையாடி வெற்றி பெற்றார்.
மற்றொரு இந்திய வீரர் மகேஷ் மங்கான்கர், மாட்டியஸ் டுவோமியை வெற்றார். சர்வதேச தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள செüரவ் கோஷல், யோலி டுயோமினியை வென்றார்.
மூன்று வீரர்கள் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அடுத்த ஆட்டத்தில் இந்தியா, வெனிசூலாவை எதிர்கொள்ள இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

18.4.1976: தமிழ் நாட்டில் கைதானோரில் 90% விடுதலை - உள் துறை அமைச்சர் தகவல்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

