மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பஞ்சாபில் உலகக் கோப்பை கபடி

உலகக் கோப்பை கபடிப் போட்டி வரும் நவம்பர் மாதம் பஞ்சாபில் நடைபெறவுள்ளது.

Updated On :11 ஜூன் 2013, 6:38 pm

உலகக் கோப்பை கபடிப் போட்டி வரும் நவம்பர் மாதம் பஞ்சாபில் நடைபெறவுள்ளது.

ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் நடைபெறும் உலகக் கோப்பை கபடி, இப்போது 4-வது ஆண்டாக நடைபெறவுள்ளது. இதில் 25 நாடுகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு இல்லாத அளவுக்கு பரிசுத்தொகையும் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.

இது தொடர்பாக பஞ்சாப் மாநில தகவல், மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் விக்ரம் சிங் மஜிதியா கூறியது: கபடிக்கு உலகத்தர அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய கண்டங்களில் இருந்து மேலும் பல நாடுகளை இந்த உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கச் செய்ய பஞ்சாப் அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. ரூ.96 கோடி செலவில் சர்வதேச தரத்திலான கபடி மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 6 மைதானங்களை

அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விளையாட்டுத் துறையை மேம்படுத்த பஞ்சாப் மாநில அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கிராமப்புறங்களில் மைதானங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விளையாட்டு சாதனங்களும் வழங்கப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.