வில்லியர்ஸ் விளாசல், சூப்பர் கிங்ஸூக்கு இலக்கு 166
ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 166 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்.


ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 166 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்.
முதலில் பேட் செய்த பெங்களூர் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணியில் அங்கித் ராஜ்புட்டுக்கு பதிலாக மோஹித் சர்மா சேர்க்கப்பட்டார்.
பெங்களூர் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. மோசஸ் ஹென்ரிக்ஸ், முத்தையா முரளிதரன், லோகேஷ்வர் ராகுல் ஆகியோர் நீக்கப்பட்டு, டேனியல் கிறிஸ்டியான், ராம்பால் சயீத் முகமது ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
கெயில் 4: டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த பெங்களூர் அணியில் ஆரம்பம் முதலே தடுமாறிய கெயில், கிறிஸ் மோரிஸ் வீசிய, ஆட்டத்தின் 2-வது ஓவரில் வைடு பாலை தேவையில்லாமல் அடிக்க முயன்று கீப்பர் தோனியிடம் கேட்ச் ஆனார். அவர் 10 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதன்பிறகு மயங்க் அகர்வாலுடன் இணைந்தார் கேப்டன் கோலி. இந்த ஜோடி நிதானமாக ஆடியதால் முதல் 5 ஓவர்களில் பெங்களூர் 26 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜடேஜா வீசிய 8-வது ஓவரில் ஸ்ட்ரெய்ட் திசையில் பிரமாண்ட சிக்ஸரை விளாசிய மயங்க் அகர்வால், அடுத்த ஓவரில் ஸ்டெம்பிங் ஆனார். அவர் 24 ரன்கள் எடுத்தார்.
கோலி அரைசதம்: இதன்பிறகு களம்புகுந்த டிவில்லியர்ஸ் பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கைத் தொடங்கினார். 14 மற்றும் 15-வது ஓவர்களில் டிவில்லியர்ஸ் தலா 2 பவுண்டரிகளை விளாச, பெங்களூரின் ரன் வேகம் அதிகரித்தது. 47 ரன்கள் எடுத்திருந்தபோது பிராவோ கோட்டைவிட்ட கேட்ச்சால் தப்பிப் பிழைத்த கோலி, 43 பந்துகளில் அரைசதம் கண்டார். அவர் 47 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
வில்லியர்ஸ் விளாசல்: பின்னர் வந்த கிறிஸ்டியான் 2 ரன்களிலும், ராம்பால் ரன் ஏதுமின்றியும் நடையைக் கட்டினர்.
எனினும் மறுமுனையில் தொடர்ந்து வேகமாக விளையாடிய டிவில்லியர்ஸ் மோரிஸ் வீசிய 19-வது ஓவரில் சிக்ஸர் அடித்து 26 பந்துகளில் அரைசதம் கண்டார். அதே ஓவரின் 4-வது பந்தில் டிவில்லியர்ஸ் அடித்த ஸ்வீப் ஷாட்டை அஸ்வின் கோட்டைவிட அது பவுண்டரியானது.
கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் டிவில்லியர்ஸ் ஆட்டமிழக்க, பெங்களூர் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் 32 பந்துகளில் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் குவித்தார். அருண் கார்த்திக் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சூப்பர் கிங்ஸ் தரப்பில் கிறிஸ் மோரிஸ் 4 ஓவர்களில் 40 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆரஞ்சு தொப்பியை தக்கவைத்த கோலி: அதிக ரன்கள் குவிப்பவர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும் வீரருக்கு ஆரஞ்சு தொப்பி அந்தஸ்து வழங்கப்படும்.
அதன்படி சனிக்கிழமை நடைபெற்ற மும்பை-புணே வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக பெங்களூர் கேப்டன் கோலியிடம் ஆரஞ்சு தொப்பி இருந்தது.
புணே வாரியர்ஸýக்கு எதிராக 41 ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக், 224 ரன்களுடன் முதலிடத்தைப் பிடித்தார். இதனால் ஆரஞ்சு தொப்பி அவர் வசமானது. எனினும் பின்னர் நடைபெற்ற சூப்பர் கிங்ஸýக்கு எதிரான ஆட்டத்தில் கோலி 30 ரன்கள் எடுத்தபோது அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார். இதனால் ஆரஞ்சு தொப்பி மீண்டும் கோலி வசமானது.
இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர், 256 ரன்கள் குவித்துள்ளார்.
ஸ்கோர் போர்டு
விக்கெட் வீழ்ச்சி: 1-6 (கெய்ல்), 2-51 (அக்ரவால்),
3-133 (கோலி), 4-135 (கிறிஸ்டியன்), 5-138 (ராம்பால்),
6-165 (டிவில்லியர்ஸ்)
பந்து வீச்சு: திர்க் நேன்ஸ் 4-0-31-1, கிறிஸ் மோரிஸ் 4-0-40-3
மொஹித் சர்மா 2-0-13-0, அஸ்வின் 4-0-28-1,
ரவீந்திர ஜடேஜா 2-0-20-0, வேயன் பிராவே 4-0-32-1.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...