இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஷமியும், அகர்வாலும் முன்னேறாமல் இருந்தால்தான் ஆச்சரியம்!

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான தரவரிசையில் இந்திய வீரர்களான மயங்க் அகர்வால், முகமது ஷமி ஆகியோர் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.

News image
Updated On :17 நவம்பர் 2019, 12:06 pm

DIN


ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான தரவரிசையில் இந்திய வீரர்களான மயங்க் அகர்வால், முகமது ஷமி ஆகியோர் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.

வங்கதேசத்துடனான முதல் டெஸ்டில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில், பேட்டிங்கில் மயங்க் அகர்வால் இரட்டைச் சதம் அடித்தும், முகமது ஷமி இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியும் அசத்தினர்.

இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. அதில், முகமது ஷமி 790 புள்ளிகள் பெற்று 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம், இந்தியப் பந்துவீச்சாளர்களில் கபில் தேவ் (877) மற்றும் ஜாஸ்பிரீத் பூம்ரா (832) ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக புள்ளிகளைப் பெற்ற இந்தியப் பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஷமி பெற்றுள்ளார்.

இதுவரை வெறும் 8 டெஸ்ட் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ள மயங்க் அகர்வால் அதற்குள் 858 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இதன்மூலம், இவரும் தரவரிசையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார். 691 புள்ளிகளைப் பெற்றுள்ள அவர் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 11-வது இடத்தைப் பிடித்துள்ளார். வங்கதேசத்துடனானஆட்டத்தில் அரைசதம் அடித்த ரவீந்திர ஜடேஜாவும் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 4 இடங்கள் முன்னேறி 35-வது இடத்தைப் பிடித்துள்ளார். 

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 1 இடங்கள் முன்னேறி முறையே 20 மற்றும் 22-வது இடத்தில் உள்ளனர். சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 10-வது இடத்தில் நீடித்தாலும், ஆல்-ரௌண்டர்களுக்கான தரவரிசையில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

வங்கதேசம் அணி சார்பில் இரண்டு இன்னிங்ஸிலும் ஆறுதல் அளித்த முஷ்பிகுர் ரஹிம் மற்றும் லிட்டோன் தாஸ் ஆகியோர் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். இதன்மூலம், ரஹிம் 5 இடங்கள் முன்னேறி 30-வது இடத்திலும், தாஸ் 6 இடங்கள் முன்னேறி 86-வது இடத்திலும் உள்ளனர். வேகப்பந்துவீச்சில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய அபு ஜாயெத்18 இடங்கள் முன்னேறி 62-வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் வெறும் 6 டெஸ்ட் ஆட்டங்களில்தான் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாப் 10-இல் 4 ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்:

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் டாப் 10-இல் விராட் கோலி (2-வது இடம்), சேத்தேஷ்வர் புஜாரா (4-வது இடம்), அஜின்க்யா ரஹானே (5-வது இடம்) மற்றும் ரோஹித் சர்மா (10-வது இடம்) ஆகியோர் இடம்பெற்று ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

இதேபோல் பந்துவீச்சில் ஜாஸ்பிரீத் பூம்ரா (4-வது இடம்), முகமது ஷமி (7-வது இடம்) மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் (10-வது இடம்) ஆகியோர் பந்துவீச்சாளர்களுக்கான டாப் 10-இல் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆல்-ரௌண்டர்களுக்கான தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா (2-வது இடம்), ரவிச்சந்திரன் அஸ்வின் (4-வது இடம்) ஆகியோர் டாப் 10-இல் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.