காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிருக்கு எதிரான் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
காமன்வெல்த் டி20 கிரிக்கெட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் உள்ளது. ஒவ்வொரு அணிக்கும் தலா 3 போட்டிகள் இருக்கு. 2 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கும் இதில் 4 அணிகள் அரையிறுதிக்கு தேர்வு செய்யப்படும். பின்னர் அதில் இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்படும். இந்த தொடர் மொத்தம் 16 போட்டிகளை கொண்டது குறிப்பிடத்தக்கது.
முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்ற இந்தியாவிற்கு இந்தப் போட்டி முக்கியமானது. 2வது போட்டி பாகிஸ்தான் மகளிருடன். இப்போட்டி மழையால் தாமதமாக தொடங்கவுள்ளது. மேலும் போட்டியின் ஓவர்கள் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சார்பில் ஸ்மிருதி மந்தனா, ஷெபாஃலி வர்மா, யாஷ்டிகா பாட்டியா, ஹர்மன்ப்ரீத், ஜெமிமா, மேக்னா, தீப்தி, ராதா, ஸ்நேகா, ரேனுகா ஆகியோர் விளையாட உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

குவாலிஃபையர் 1: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!

உசிலம்பட்டி: மின்னல் பாய்ந்து கூலித் தொழிலாளிகள் 3 பேர் பலி!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



