கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

சிஎஸ்கேவுடன் கைகோர்த்த நாவியூபிஐ!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை மார்ச் 30 அன்று எதிர்கொள்கிறது.

News image
Updated On :28 மார்ச் 2026, 9:23 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஐபிஎல் 2026-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் அதிகாரபூர்வ பேமென்ட்ஸ் பார்ட்னராக நாவியூபிஐ இணைந்துள்ளது.

ஐபிஎல் 2026 சனிக்கிழமை தொடங்குகிறது. பெங்களூருவில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்ஸ் என்ற அந்தஸ்துடன் களமிறங்கும் ஆர்சிபி அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்கொள்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை மார்ச் 30 அன்று எதிர்கொள்கிறது. இந்நிலையில், சிஎஸ்கே அணியின் பேமென்ட்ஸ் பார்ட்னராக நாவியூபிஐ அதிகாரபூர்வமாக இணைந்துள்ளது.

நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும் தலைமைச் செயல் அலுவலருமான ராஜீவ் நரேஷ் இதுபற்றி கூறியதாவது:

“இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களை ஒன்றிணைக்கும் சக்தி கிரிக்கெட்டுக்கு உண்டு. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீது உள்ள ஆர்வம் மிகவும் முக்கியமானது. எங்கள் கவனம் எளிமையானது - வேகமான, சீரான, எந்தத் தடையும் இல்லாத கட்டண அனுபவம்” என்றார் ராஜீவ் நரேஷ்.

இதுபற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அலுவலர் காசி விஸ்வநாதன் கூறியதாவது:

“இந்த சீசனுக்கான எங்கள் அதிகாரபூர்வ பேமென்ட்ஸ் பார்ட்னராக நாவியூபிஐயை வரவேற்கிறோம். டிஜிட்டல் கட்டணங்கள் இன்று தினசரி வாழ்க்கையின் ஒருபகுதியாக மாறிவிட்டது. மைதானத்திலும் சரி,மைதானத்தின் வெளியிலும் சரி... டிஜிட்டல் கட்டணங்களில் சீரான முறையில் ஈடுபட ரசிகர்களுக்கு இது உதவும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார் காசி விஸ்வநாதன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.