குடிநீரைக் கொண்டு கார்களைக் கழுவியதால் விராட் கோலிக்கு ரூ. 500 அபராதம்!
விராட் கோலியின் வீட்டில் உள்ள கார்களைக் குடிநீரைக் கொண்டு கழுவுவதாகவும் இதனால் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்...


ஹரியானாவில் உள்ள குருகிராமில் விராட் கோலிக்கு வீடு ஒன்று உள்ளது. அங்கு, விராட் கோலியின் கார்களைக் குடிநீரைக் கொண்டு கழுவியதாக குருகிராம் மாநகராட்சி விராட் கோலிக்கு அபராதம் விதித்துள்ளது.
டிஎல்எஃப் பிரிவு 1-ல் விராட் கோலிக்குச் சொந்தமான வீடு உள்ளது. கோலியின் 6 கார்களும் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கோலியின் கார்களை, டியூபின் மூலம் குடிநீரைக் கொண்டு கழுவியுள்ளார்கள் வீட்டு உதவியாளர்கள். இதனால் குடிநீரை வீணடித்ததற்காக மாநகராட்சி அதிகாரிகள், விராட் கோலிக்கு ரூ. 500 அபராதம் விதித்துள்ளார்கள். அபராதத் தொகை உடனடியாகச் செலுத்தப்பட்டுள்ளது.
குருகிராம் பகுதியில் பொதுமக்கள் குடிநீரை வீணாக்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விராட் கோலியின் வீட்டில் உள்ள கார்களைக் குடிநீரைக் கொண்டு கழுவுவதாகவும் இதனால் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாவதாகவும் மாநகராட்சிக்கு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் புகார் அளித்துள்ளார்கள்.
விராட் கோலி வீட்டு உதவியாளர்கள் டியூப் வழியாக குடிநீரைப் பயன்படுத்தியதற்குப் பதிலாக பக்கெட்டில் நீரை ஊற்றி பிறகு அதைக் கொண்டு கார்களைக் கழுவியிருக்கலாம் என்று குருகிராம் மாநகராட்சியின் மக்கள் தொடர்பு அதிகாரி இந்த விவகாரம் குறித்து தன்னுடைய கருத்தைக் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்று வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...