கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அப்படியா சொன்னார் ஜோஃப்ரா ஆர்ச்சர்?: ஆச்சர்யப்பட்ட விராட் கோலி!

என்னைப் பற்றி அப்படிச் சொன்னால் அதைப் பாராட்டாக எண்ணிக்கொள்கிறேன். ஏனெனில் அவரே ஓர் உலகத் தரமான பந்துவீச்சாளர் தான்... 

News image
Updated On :24 மே 2019, 5:39 am

எழில்

உலகக் கோப்பைப் போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த விருப்பப்படுகிறேன். ஐபிஎல்-லில் என்னால் அவருடைய விக்கெட்டை எடுக்க முடியாமல் போய்விட்டது. லெக் ஸ்பின்னர் ஷ்ரேயஸ் கோபால் ஒவ்வொரு முறையும் அவருடைய விக்கெட்டை எடுத்துவிட்டார் என்று ஒரு பேட்டியில் கூறினார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜோஃப்ரா ஆர்ச்சர்.

இங்கிலாந்தில் நேற்று நடைபெற்ற கேப்டன்கள் சந்திப்பில் ஆர்ச்சரின் பேட்டி குறித்த கேள்வியை எதிர்கொண்டார் கோலி. அதற்கு அவர் கூறியதாவது:

அவர் அப்படிச் சொன்னாரா? இது எனக்குப் புதிய தகவல். இது இங்கிலாந்து கேப்டனுக்கும் புதிய தகவலாக இருக்கும். இதுபோன்ற விஷயங்களில் நான் கவனம் செலுத்தமாட்டேன்.

அணிக்காக நன்றாக விளையாடுவதை, நான் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதைப் பெருமையாக எண்ணுவேன். ஜோஃப்ரா என்னைப் பற்றி அப்படிச் சொன்னால் அதைப் பாராட்டாக எண்ணிக்கொள்கிறேன். ஏனெனில் அவரே ஓர் உலகத் தரமான பந்துவீச்சாளர் தான். 

ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடும் விதத்தைப் பார்த்துள்ளேன். உலகம் முழுக்க சிறப்பாக விளையாடியுள்ளார். அதனால் தான் அவர் மிக விரைவாக இங்கிலாந்து அணியில் உலகக் கோப்பை போன்ற ஒரு போட்டிக்குச் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர் ஒரு எக்ஸ் ஃபேக்டராக இருப்பார் என எண்ணுகிறேன். ஏனெனில் அவரிடம் எல்லாவிதமான திறமைகளும் உள்ளன. மற்ற வீரர்களை விடவும் வித்தியாசமாக உள்ளார். மிக வேகமாகப் பந்துவீசக்கூடியவர். அவர் ஓடிவருவதைப் பார்க்கும்போது அதைக் கணிக்கமுடியாது. இந்த உலகக் கோப்பைப் போட்டியில் அவருடைய திறமை அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அவருடைய பந்துவீச்சை நான் கவனிப்பேன். அவர் மிகவும் ஈர்க்கக்கூடிய கிரிக்கெட் வீரராக உள்ளார் என்று கூறியுள்ளார் கோலி. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.