ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

எப்படிச் சாத்தியமானது?: ஸ்டோக்ஸின் இந்த கேட்சை உங்களால் நம்பமுடிகிறதா? (விடியோ)

மைதானத்தில் இந்தக் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்கள். தொலைக்காட்சி ஒளிபரப்பில்...

News image
Updated On :31 மே 2019, 5:15 am

எழில்

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து. 

பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் அதன் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். முதலில் ஆடிய இங்கிலாந்து 311/8 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ரஷித் பந்துவீச்சில் ஆண்டில் பெலுக்வயோ, ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரஷித் வீசிய பந்தை சிக்ஸருக்கு அடிக்க பெலுக்வயோ முயன்றபோது தனக்கு மேலே சென்ற பந்தை ஒற்றைக் கையால் பிடித்து அப்படியே சுழன்று கீழே விழுந்தார் ஸ்டோக்ஸ். மைதானத்தில் இந்தக் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்கள். தொலைக்காட்சி ஒளிபரப்பில் வர்ணனையாளர்கள் ஸ்டோக்ஸை மிகவும் புகழ்ந்தார்கள். கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கேட்ச் இது என்று கிரிக்கெட் நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.