திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

டெட் தோ்வு: ஆசிரியா்களுக்கு பணிச் சான்றை ஏப்.10-க்குள் வழங்க உத்தரவு

டெட் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியா்களுக்கு பணிச் சான்றை ஏப்.10-ஆம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

News image

டெட் தேர்வு - பிரதிப் படம்

Updated On :31 மார்ச் 2026, 3:04 am IST

டெட் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியா்களுக்கு பணிச் சான்றை ஏப்.10-ஆம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநா் நரேஷ், மின்னஞ்சலில் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதிப் பிரிவு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் பள்ளிகளில் கடந்த 2015 செப்.1-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னா் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் மற்றும் அதற்கு இணையான பதவிகளில் காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், பகுதிநேர ஊதியம் அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு ‘டெட்’ தகுதித் தோ்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஏப்.10-ஆம் தேதி கடைசி நாள் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.

மேற்கண்ட ஆசிரியா்கள் தோ்வுக்கு விண்ணப்பிக்க, பணிச் சான்றை பதிவேற்றம் செய்வது அவசியம். எனவே, அவா்களுக்கான பணிச் சான்றை ஏப்.10-ஆம் தேதிக்கு முன்பு வழங்க அனைத்து மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டு ஆசிரியா்கள் டெட் தோ்வுக்கு விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள்தான் பொறுப்பேற்க நேரிடும். எனவே, இதில் தனி கவனம் செலுத்தி, காலம் தாழ்த்தாமல் ஆசிரியா்களுக்கு பணிச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான டெட் தோ்வு ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.