அடிலெய்டு பிட்ச் எவ்வாறு தயார் செய்யப்படுகிறது? பிட்ச் மேற்பார்வையாளரின் பேட்டி!

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெறும் பிட்ச் குறித்து அதன் மேற்பார்வையாளர் கூறியதாவது...
அடிலெய்டு பிட்ச், இந்தியா -ஆஸி.கேப்டன்கள்.
அடிலெய்டு பிட்ச், இந்தியா -ஆஸி.கேப்டன்கள்.
Published on
Updated on
2 min read

பார்டர் - கவாஸ்கர் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 2ஆவது டெஸ்ட் டிச.6ஆம் தேதி அடிலெய்டு ஆடுகளத்தில் நடைபெறவிருக்கிறது.

பிங்க் பந்தில் இரவு பகல் ஆட்டமாக நடைபெறுகிறது. இந்திய அணி 2020இல் இந்த ஆடுகளத்தில்தான் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

1-0 என இந்தியா முன்னிலையில் இருந்தாலும் இந்த ஆடுகளம் குறித்து இந்திய அணிக்கு அச்சமிருக்கும்.

இது குறித்து அடிலெய்டு ஆடுகளத்தின் தலைமைப் மேற்பார்வையாளர் டாமியன் ஹக் கூறியதாவது:

6 மி.மீ. புற்கள் இருக்கும்

அடிலெய்டில் செயற்கையான வெளிச்சத்துக்கு கீழே பேட்டிங் செய்வது மிகவும் கடினம் என வரலாறு குறிப்பிடுகிறது. இங்கு பிட்சில் 6 மி.மீ. புற்கள் இருக்கும்.

விளையாட்டின் அனைத்து வகையான கூறுகளையும் ஆட்டத்தின்போது சில நேரங்களில் ஆவது இருக்கும்படி பிட்சை தயாரித்து வருகிறோம்.

சொரசொரப்பான புற்கள் உடன் கூடிய பிட்சை உருவாக்க முயல்கிறோம். அந்தமாதிரி புற்கள் காய்ந்தும் கடினமாக இருக்கும்.

அடிலெய்டில் குறைவான களிமண் இருப்பதால்தான் முடிந்த அளவுக்கு பந்து வேகமாகவும் பௌன்ஸ் ஆகும்படியும் பிட்சை உருவாக்க முயற்சிக்கிறோம்.

சுழல்பந்துக்கு முக்கியத்துவம்

சுழல்பந்து சாதாரணமான பங்கு வகிக்கும். நல்ல பௌன்சர்கள் இருக்கும் சமயத்தில் சுழல்பந்துக்கும் சாதகம் இருக்கும். அதுதான் கேம் பிளானாக இருக்கிறது.

பந்து பழையதான பிறகு பேட்டர்களால் ரன்கள் குவிக்க முடியும். ஒரு ஃபார்ட்னர்ஷிப் அமைந்தால் சிறப்பான ரன்களை அடிக்கலாம்.

அடிலெய்டில் சுழல்பந்துக்கு எப்போதும் முக்கியமான பங்கு இருக்கிறது. நீங்கள் உங்களது முக்கியமான சுழல்பந்து வீரரை தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் இதைச் செய்ய வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விக்கே இடமில்லை. இதைக் கண்டிப்பாக செய்தே ஆக வேண்டும்.

சமநிலையான பிட்ச்

என்னுடைய பக்கம் என்றால் நான் சுழல்பந்தினைதான் தேர்ந்தெடுப்பேன். கூடுதலான புற்களை விடுவதற்கான காரணம் அது சுழல்பந்து வீச்சாளர்களுக்கானது. அந்தப் புற்கள் பந்தின் பிடிப்புக்காகவும் பௌன்சர்களுக்காவும் பயன்படும்.

நாங்கள் சுழல்பந்தின் தாக்கம் இருக்க வேண்டுமென விரும்புகிறோம். மற்ற இடங்களில் இதை நிகழ்த்த முடியாமல் போனாலும் இங்கு இதை பாரம்பரியமாக வைத்திருக்கிறோம்.

ஆட்டம் முழுவதும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனாலும் சுழல்பந்து நல்ல பங்கு வகிக்கும். சுழல்பந்து இரவில் நன்றாக இருக்கும். இரவுவரை புதிய பந்தினை தக்கவைத்தால் நல்ல விளையாட்டு காத்திருக்கிறது.

சமநிலையான ஆட்டத்துக்கு நாங்கள் முயற்சிக்கிறோம். பேட்டிங்கிற்கும் பந்துவீச்சிற்கும் சாதகமாக பிட்ச் அமைப்பது மிகவும் கடினம். திறமையாக விளையாடினால் ஆட்டம் முழுவதும் விளையாடும்படி நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம்.

முதல்நாள் மழை பெய்ய வாய்ப்பு

இந்த அடிலெய்டில் வழக்கத்துக்கு மாறாக முதல்நாளில் இடி மின்னல் இருக்குமாறு வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அவை எப்போது வருமென சரியாக தெரியவில்லை. நாங்கள் பிட்சை மறைக்க வேண்டிருக்கும். சனிக்கிழமை காலையில் சரியாகிவிடுமென நினைக்கிறேன்.

பிங்க் பந்தின் நகர்வுகளுக்கு வானிலை மிகவும் முக்கியமான பங்கு வகிக்கும். விளக்குகளின் வெளிச்சத்துக்கு கீழ், சரியான சீதோஷ்ண நிலையில் பந்து திரும்பும்.

2020இல் இந்தியா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதற்கு பிறகு ஆஸி.யில் இப்போதுதான் இந்தியா பிங்க் பந்தில் விளையாடுகிறது. பிட்சில் எந்த பூதமும் இல்லை. 3 நாளில் போட்டி முடிந்துவிடுமென யாரும் நினைக்கவில்லை. அதற்கு பிட்ச் காரணமில்லை, ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com