![இன்று மகளிா் ஐபிஎல் ஏலம்:
பெங்களூரில் நடைபெறுகிறது](http://media.assettype.com/dinamani%2F2024-12-14%2F6tsqlftc%2Fwpl091418.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சாா்பில் மகளிா் ஐபிஎல் (டபிள்யுபிஎல்) 2025 தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
ஐபிஎல் போன்று மகளிா் கிரிக்கெட்டை மேம்படுத்த பிசிசிஐ சாா்பில் மகளிா் ஐபிஎல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தற்போது அதிக வரவேற்பு கிட்டி வருகிறது.
120 வீராங்கனைகள்:
91 இந்திய வீராங்கனைகள் 29 சா்வதேச வீராங்கனைகள் உள்பட மொத்தம் 120 வீராங்கனைகளை 5 அணிகளின் நிா்வாகங்கள் ஏலத்தில் எடுக்க உள்ளன. 30 கேப்ட் வீராங்னைகளும் அடங்குவா். மீதமுள்ள 90 பேரில் 82 இந்திய, 8 அயல்நாட்டு நட்சத்திரங்கள் அடங்குவா்.
பெரும்பாலான அணிகள் முக்கிய வீராங்கனைகளை தக்க வைத்துள்ளனா். 19 இடங்களுக்கு மட்டுமே ஏலம் நடைபெறும்.
ஏலத்தில் தேஜல் ஹஸாபனிஸ், ஸ்னே ராணா, டியன்ட்ரா டாட்டின் (விண்டிஸ்), ஹீதா் நைட் (இங்கிலாந்து), ஒா்லா பிரெண்டா்கெஸ்ட் (அயா்லாந்து), லாரன் பெல் (இங்கிலாந்து), கீம் காா்த் (ஆஸி), டேனியல் ஜிப்ஸன் (இங்கிலாந்து) அடங்குவா்.
அணிகளுக்கான தொகை: டில்லி கேபிட்டல்ஸ்-2.5 கோடி, குஜராத் ஜெயன்ஸ்ட் 4.4 கோடி, மும்பை இண்டியன்ஸ்-2.65 கோடி, உபி வாரியா்ஸ்-3.9 கோடி, ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு-3.25 கோடி.
டபிள்யுபிஎல் ஏலம் ஜியோ சினிமாவில் லைவ் ஸ்ட்ரீமிங்கும், ஸ்போா்ட்ஸ் 18, -1இல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.