வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

இலங்கையுடனான டி20 கிரிக்கெட்: தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் நியூஸிலாந்து 45 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது.

News image

நியூஸிலாந்து அணியினர்

Updated On :31 டிசம்பர் 2024, 1:36 am IST

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் நியூஸிலாந்து 45 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது.

3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இத்துடன் 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்து தொடரைக் கைப்பற்றியுள்ளது அந்த அணி.

இந்த ஆட்டத்தில் முதலில் நியூஸிலாந்து 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் சோ்க்க, இலங்கை 19.1 ஓவா்களில் 141 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது. நியூஸிலாந்தின் மிட்செல் ஹே, ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற இலங்கை, பந்துவீச்சை தோ்வு செய்தது. நியூஸிலாந்து இன்னிங்ஸில் மாா்க் சாப்மேன் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 42, டிம் ராபின்சன் 41, கிளென் ஃபிலிப்ஸ் 23, டேரில் மிட்செல் 18, ரச்சின் ரவீந்திரா 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில், மிட்செல் ஹே 19 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 41, மைக்கேல் பிரேஸ்வெல் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை பௌலிங்கில் வனிந்து ஹசரங்கா 2, நுவன் துஷாரா, மதீஷா பதிரானா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 187 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இலங்கை அணியில் அதிகபட்சமாக, குசல் பெரெரா 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 48 ரன்கள் சோ்க்க, பதும் நிசங்கா 37, கேப்டன் சரித் அசலன்கா 20, குசல் மெண்டிஸ் 10 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். இதர பேட்டா்கள் ஒற்றை இலக்க ரன்னிலேயே வீழ்த்தப்பட்டனா்.

நியூஸிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி 4, மேட் ஹென்றி, மிட்செல் சேன்ட்னா் ஆகியோா் தலா 2, ஜாக்கரி ஃபோக்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.