உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

இந்தியாவுக்கு எதிராக வரலாற்று வெற்றி; மனம் திறந்த நியூசி. கேப்டன்!

இந்தியாவுக்கு எதிரான வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் மனம் திறந்துள்ளார்.

News image

டாம் லாதம் - படம் | நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :3 நவம்பர் 2024, 6:46 pm IST

இந்தியாவுக்கு எதிரான வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் மனம் திறந்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரையும் முழுமையாக கைப்பற்றியது.

மனம் திறந்த நியூசிலாந்து கேப்டன்

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் கிடைத்த இந்த வரலாற்று வெற்றி மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேசியுள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கியதிலிருந்து, தற்போது நாங்கள் டெஸ்ட் தொடரை முழுமையாக வெற்றி பெற்றது வரை நியூசிலாந்து அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். மும்பையில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே இந்திய அணிக்கு நாங்கள் சவாலளித்தோம். இந்த வெற்றி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

போட்டிகள் நடைபெற்ற மைதானங்களின் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு, நியூசிலாந்து வீரர்கள் தங்களை வேகமாக மாற்றிக் கொண்டனர். பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். கடந்த வாரம் மிட்செல் சாண்ட்னர் அணியின் வெற்றிக்கு உதவினார். மும்பையில் நடைபெற்ற கடைசி போட்டியில் அஜாஸ் படேல் சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்தின் வெற்றிக்கு உதவினார். இந்தியாவுக்கு வந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் நாங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டோம் என்றார்.

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் முழுமையாக டெஸ்ட் தொடர் ஒன்றில் வென்றுள்ள முதல் அணி என்ற சாதனையை நியூசிலாந்து படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.