தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

டெஸ்ட் சாம்பியன்ஷிப்: அதிக சிக்ஸர் விளாசியவர்களில் முதலிடத்தில் ஜெய்ஸ்வால்!

அதிக சிக்ஸர் விளாசியவர்களின் பட்டியலில் இந்திய இளம்வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதலிடத்தில் பிடித்துள்ளார்.

News image
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
Updated On :2 அக்டோபர் 2024, 10:29 am

DIN

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக சிக்ஸர் விளாசியவர்களின் பட்டியலில் இந்திய இளம்வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதலிடத்தில் பிடித்துள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 4 இன்னிங்ஸிலும் அதிரடியாக விளையாடி விக்கெட்டை பறிகொடுத்த போதிலும் இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட்களிலும் 4 இன்னிங்ஸில் 3-ல் அரைசதம் விளாசி அசத்தினார்.

இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஜெய்ஸ்வால் 20 இன்னிங்ஸில் 7 அரைசதம், 3 சதம், 2 இரட்டைசதம் ஆகியவை அடித்துள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரானத் தொடரில் 700-க்கும் அதிகமான ரன்கள் குவித்து வியக்க வைத்தார்.

அவர் இதுவரை தனது இன்னிங்ஸில் 32 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். 2014-ம் ஆண்டு பிரண்டன் மெக்கல்லம் 33 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்தார். ஜெய்ஸ்வால் இந்த சாதனையை முறியடிக்க ஒரு சிக்ஸர்கள் அடித்தால் போதும். வருகிற அக்டோபர் 16 ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் அவர் அச்சாதனையும் எளிமையாக முறியடிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

2023-2025 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட உலக சாம்பியன்ஷிப் கோப்பையில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள்

யஷஸ்வி ஜெய்ஸ்வால் -32 சிக்ஸர்கள் (இந்தியா)

பென் ஸ்டோக்ஸ்-22 சிக்ஸர்கள்(இங்கிலாந்து)

கமிந்து மெண்டிஸ் -19 சிக்ஸர்கள்(இலங்கை)

ரோகித் சர்மா-17 சிக்ஸர்கள்(இந்தியா)

சுப்மன் கில்-16 சிக்ஸர்கள்(இந்தியா)

கிளென் பிலிப்ஸ்-16 சிக்ஸர்கள்(நியூசிலாந்து)

மேலும், ஜெய்ஸ்வால் ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவர் 28 சிக்ஸர்கள் அடித்துள்ளார். வங்காளதேசத்திற்கு எதிரான தொடரின் போது பென் ஸ்டோக்ஸின் (26 சிக்ஸர்கள்) சாதனையையும் முறியடித்தார்.

டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள்

பிரண்டன் மெக்கல்லம் -33 சிக்ஸர்கள் (2014)

யஷஸ்வி ஜெய்ஸ்வால் -28* சிக்ஸர்கள்(2024)

பென் ஸ்டோக்ஸ் -26 சிக்ஸர்கள்(2022)

ஆடம் கில்கிறிஸ்ட் -22 சிக்ஸர்கள்(2005)

வீரேந்திர சேவாக் -22 சிக்ஸர்கள்(2008)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.