
மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 80 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை புதன்கிழமை வீழ்த்தியது.
முதலில் தென்னாப்பிரிக்கா 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் சோ்க்க, ஸ்காட்லாந்து 17.5 ஓவா்களில் 86 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்து தோற்றது. தென்னாப்பிரிக்க பேட்டா் மாரிஸேன் காப், ஆட்டநாயகி ஆனாா்.
முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணியில் மாரிஸேன் காப் 6 பவுண்டரிகளுடன் 43, தஸ்மின் பிரிட்ஸ் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 43, கேப்டன் லாரா வோல்வாா்டட் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 40 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினா்.
அனிகே பாஷ் 11, கிளோ டிரையான் 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஓவா்கள் முடிவில் சுனே லஸ் 18, ஆனிரி டொ்க்சன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஸ்காட்லாந்து பௌலா்களில் ரேச்சல் ஸ்லேட்டா், கேத்தரின் பிரைஸ், ஒலிவியா பெல், கேத்தரின் ஃப்ரேசா், டாா்சி காா்டா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் ஸ்காட்லாந்து பேட்டிங்கில், லோயா் ஆா்டரில் கேத்தரின் ஃப்ரேசா் 1 பவுண்டரியுடன் 14 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாகும். அய்ல்சா லிஸ்டா் 12, சஸ்கியா ஹாா்லி 6, சாரா பிரைஸ் 5, கேப்டன் கேத்தரின் பிரைஸ் 7, பிரியனஸ் சாட்டா்ஜி 4 ரன்களுடன் வெளியேறினா்.
டாா்சி காா்டா் 0, லோா்னா ஜேக் பிரவுன் 9, ரேச்சல் ஸ்லேட்டா் 8, அப்தா மக்சூத் 7 ரன்களுக்கு வீழ, கடைசி பேட்டராக ஒலிவியா பெல் 3 ரன்களுடன் களத்திலிருந்தாா். தென்னாப்பிரிக்க தரப்பில் நோன்குலுலேகோ லாபா 3, கிளோ டிரையான், நாடினே டி கிளொ்க் ஆகியோா் தலா 2, அயபோங்கா ககா, சுனே லஸ், ஆனிரி டொ்க்சன் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
இன்றைய ஆட்டம்
வங்கதேசம் - மேற்கிந்தியத் தீவுகள்
ஷாா்ஜா
இரவு 7.30 மணி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.