வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

டேவிட் வார்னருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கம்!

டேவிட் வார்னருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கப்பட்டுள்ளது.

News image

டேவிட் வார்னர் (கோப்புப் படம்)

Updated On :25 அக்டோபர் 2024, 10:42 am IST

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருக்கு கேப்டனாக விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் ஓய்வுபெற்ற முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், ஆஸ்திரேலியா மட்டுமின்றி இந்தியாவிலும் மிகவும் பிரபலமானவர்.

இவர் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக 2016 ஆம் ஆண்டு கோப்பையை வென்று கொடுத்துள்ளார். மேலும், தெலுங்கில் வெளியான அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ படத்தில் வரும் காட்சிகளுக்கு ஏற்றார்போல் நடித்து விடியோ வெளியிட்டு மிகவும் பிரபலமானார். தற்போது தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

2018 ஆம் ஆண்டு கேப்டவுனில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பந்து மீது மணல் தாள் வைத்து தேய்த்து சேதப்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கு ஒரு ஆண்டும், கேப்டனாக பொறுப்பேற்க வாழ்நாள் தடையும் தடைவிதிக்கப்பட்டது.

மேலும், அவருடன் சேர்த்து இந்தச் சம்பவத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், கேமரூன் பான்கிராப்ட் ஆகியோருக்கும் ஒரு ஆண்டு தடைவிதிக்கப்பட்டது.

டேவிட் வார்னர் இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் முன் ஆஜராகி இதுபற்றி வருத்தம் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக டேவிட் வார்னரின் வருத்தத்தை ஏற்று கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவருக்கு விதிக்கப்பட்ட கேப்டனாவதற்கான வாழ்நாள் தடை நீக்குவதாக அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெற்றிருந்தாலும், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஸ் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். இந்தத் தொடரில் அவர் கேப்டனாக வாய்ப்புள்ளது.

டேவிட் வார்னர் கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றிருந்தது. மேலும், ஒருநாள், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

வருகிற ஞாயிற்றுக்கிழமை தனது 38 வயது பிறந்தநாளை கொண்டாடும் டேவிட் வார்னருக்கு இது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் பரிசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.