அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

மகன் வாழ்க்கையை அழித்த தோனியை மன்னிக்கவே மாட்டேன்: யுவராஜ் தந்தை

மகேந்திர சிங் தோனி குறித்து யுவராஜ் சிங்கின் தந்தை விமர்சனம் பற்றி...

News image

தோனியுடன் யுவராஜ் - கோப்புப்படம்

Updated On :2 செப்டம்பர் 2024, 12:53 pm IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை மீண்டும் சக வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் விமர்சித்துள்ளார்.

யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை தோனி அழித்துவிட்டதாகவும், அவரை மன்னிக்கவே மாட்டேன் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சாதனை கேப்டனாக விளங்குபவர் மகேந்திர சிங் தோனி. இவரது தலைமையிலான இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

இவர் கேப்டனாக இருந்த காலகட்டத்தில், அணியின் முக்கிய ஆல்-ரவுண்டராக யுவராஜ் சிங் திகழ்ந்தார்.

தோனி மீது விமர்சனம்

இந்த நிலையில், இந்திய அணியில் யுவராஜ் சிங்குக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு தோனிதான் காரணம் என்று அடிக்கடி பொதுவெளியில் பேசிவரும் யோகராஜ் சிங், மீண்டும் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் யோகராஜ் சிங் அளித்த பேட்டியில்,

“நான் தோனியை மன்னிக்கவே மாட்டேன். அவரது முகத்தை கண்ணாடியில் அவர் பார்க்க வேண்டும். அவர் மிகப்பெரிய கிரிக்கெட்டர், ஆனால் எனது மகனுக்கு எதிராக அவர் செய்தது அனைத்தும் தற்போது வெளிவருகிறது, அவரை என் வாழ்க்கையில் மன்னிக்கவே மாட்டேன்.

எனது வாழ்க்கையில் இரண்டு விஷயங்களை நான் செய்ததில்லை. ஒன்று எனக்கு தீங்கு விளைவித்தவரை ஒருபோதும் மன்னித்ததில்லை. மற்றொன்று, அவர்கள் எனது குடும்ப உறுப்பினராக இருந்தாலும் சரி, என் குழந்தைகளாக இருந்தாலும் சரி, அவர்களை கட்டிப் பிடித்ததில்லை.

யுவராஜ் சிங் இன்னும் 4, 5 ஆண்டுகள் விளையாடியிருக்க முடியும். யுவராஜை போன்ற இன்னொரு வீரர் மீண்டும் கிடைக்க மாட்டார் என்று கம்பீர், சேவாக் போன்றோரே கூறியுள்ளனர். புற்றுநோயுடன் விளையாடி நாட்டுக்கு உலகக் கோப்பை வென்று கொடுத்த யுவராஜுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தோனி மீது பல முறை யோகராஜ் சிங் விமர்சனத்தை வைத்த போதிலும், இதுவரை யுவராஜ் சிங் தவறாக ஒரு கருத்தைகூட கூறியதில்லை.

யுவராஜ் சிங்கின் சாதனை

இந்திய அணிக்காக 2000 முதல் 2017 வரை 402 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள யுவராஜ் சிங், 17 சதங்கள், 71 அரைசதங்களுடன் 11,178 ரன்கள் குவித்துள்ளார்.

2002 ஐசிசி சாம்பினஸ் டிராபி, 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றிய யுவராஜ் சிங், 2019ஆம் ஆண்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.