இந்தியா பேட்டர்களுக்கானது மட்டுமில்லை...! 3 வித கிரிக்கெட்டிலும் பும்ராதான் தலைசிறந்தவர்..! கம்பீர் புகழாரம்!
இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஜஸ்பிரீத் பும்ராவை பாராட்டி பேசியுள்ளார்.

இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் - R Senthilkumar
பாகிஸ்தானை டெஸ்ட் தொடரில் வீழ்த்திய உற்சாகத்தோடு வங்கதேச அணி 2 டெஸ்ட் ஆட்டங்கள், 3 டி20 ஆட்டங்கள் தொடரில் ஆடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
முதல் டெஸ்ட் ஆட்டம் வியாழக்கிழமை (செப். 19) சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெறவுள்ளது.
இதற்காக கேப்டன் ரோஹித் சா்மா தலைமையிலான இந்திய அணி, நஜ்முல் ஷண்டோ தலைமையிலான வங்கதேச அணி வீரா்கள் கடந்த இரண்டு நாள்களாக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனா்.
டி20 உலகக் கோப்பையில் பும்ரா 15 விக்கெட்டுகளை எடுத்தார். வங்கதேசத்துக்கு உடனான டெஸ்ட் போட்டியில் மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாடவிருக்கிறார். பும்ரா குறித்து போட்டிக்கு முன்பான செய்தியாளர் சந்திப்பில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியதாவது:
3 விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் உலகத்தின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. இந்தியாவில் பந்துவீச்சாளர்கள் குறித்து அதிகமாக பேசுவதில்லை. எப்போதும் இந்தியாவின் பேட்டர்கள் குறித்தே பேசுவார்கள். ஒருகாலத்தில் இந்தியா பேட்டர்களின் ஆதிக்கம் மிகுந்ததாக இருந்தன. தற்போது பந்துவீச்சாளர்களை பற்றியும் பேச முக்கிய காரணமாக பும்ரா, ஷமி, சிராஜ், அஸ்வின், ஜடேஜாவுக்கு நாம் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும்.
முடிந்த அளவுக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட பும்ரா விரும்புகிறார். இங்கிலாந்துக்கு எதிராக சிவப்பு நிற பந்தில் (டெஸ்ட்) செய்ததும் மே.இ.தீவுகளில் டி20யில் செய்ததும் அற்புதம். இந்தியாவுக்காக விளையாடுவதும் எப்போது ஆட்டத்தை மாற்றும் திறன்வாய்ந்தவருமான பும்ரா எங்களுடன் ஓய்வு அறையில் இருப்பது எங்களுக்கு பெருமைமிக்கது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



