கடைசி டி20: வங்கதேசத்துக்கு 118 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!
வங்கதேசத்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


வங்கதேசத்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி சட்டோகிராமில் இன்று (டிசம்பர் 2) நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
அயர்லாந்து அணி 19.5 ஓவர்களில் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் கேப்டன் பால் ஸ்டிரிலிங் அதிகபட்சமாக 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
அவரைத் தொடர்ந்து, டாக்ரெல் 19 ரன்களும், டிம் டெக்டார் 17 ரன்களும் எடுத்தனர். கேரத் டெலானி 10 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
வங்கதேசம் தரப்பில் முஷ்தபிசூர் ரஹ்மான் மற்றும் ரிஷாத் ஹொசைன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். ஷோரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும், மஹேதி ஹாசன் மற்றும் சாய்ஃபுதீன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...