

இரண்டாவது ஆஷஸ் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. மிட்செல் ஸ்டார்க் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என ஆஸி. முன்னிலை வகிக்கிறது.
பிரிஸ்பேனில் கடந்த டிச.4ஆம் தேதி தொடங்கிய இரண்டாவது ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 334க்கு ஆல் அவுட்டானது.
அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 511-க்கு ஆல் அவுட்டானது. தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து 241க்கு ஆல் அவுட்டானது.
அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா 10 ஓவர்களில் 69/2 ரன்கள் எடுத்து வென்றது.
இந்த இரண்டாவது இன்னிங்ஸில் ஆர்ச்சர் வேண்டுமென்றே ஸ்டீவ் ஸ்மித்திடம் வம்பிழுத்தார்.
8.1ஆவது பந்தில் ஸ்மித் ஆர்ச்சர் வீசிய பந்தை பவுண்டரிக்கு அடிப்பார். அடுத்த பந்தை டாட் செய்ததும் ஆர்ச்சர் கோபமாக ஸ்மித்தைப் பார்த்து ஏதோ பேசுவார்.
பின்னர் 8.3-ஆவது பந்தில் ஸ்மித் பேட்டில் உரசி பின்புறமாக பவுண்டரி செல்லும். உடனே ஆர்ச்சர் ஸ்மித்திடம் சென்று மீண்டும் கோபத்துடன் பேசுவார்.
150 கி.மீ./மணி வேகத்தில் வீசப்பட்ட 8.4ஆவது பந்தில் ஸ்டீவ் ஸ்மித் சிக்ஸர் அடிப்பார். இந்தமுறை ஸ்மித் ஆர்ச்சரைப் பார்த்து கையில் சைகைக் காண்பிப்பார்.
போட்டி முடிந்ததும் ஆர்ச்சர் ஸ்மித்திடம் கை குலுக்கியும் சரியாமல் பேசாமல் சோகத்துடன் கடந்துசெல்வார்.
இதுவரை, ஸ்டீவ் ஸ்மித் ஆர்ச்சரிடம் டெஸ்ட்டில் ஆட்டமிழந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.