

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரின் முருகன் டாட்டூ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பிரெனலன் சுப்ராயன் (32 வயது) எனும் தென்னாப்பிரிக்க வீரர் எஸ்ஏ 20 தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
எஸ்ஏ 20 தொடரில் சிஎஸ்கே அணியின் தென்னாப்பிரிக்க கிளையாக ஜேஎஸ்கே (ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்) அணி இருக்கிறது.
இந்த அணியில் சுப்ராயன் விளையாடி வருகிறார். இந்த அணி தனது இன்ஸ்டாவில் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளது. அதில் முத்து முருகன் துணை என்ற தலைப்பில் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளது.
அந்த விடியோவில் சுப்ராயன் தனது கையில் ”ஓம் சரவணபவ” என்ற முருகன் டாட்டூவை பச்சைக் குத்தியுள்ளார்.
தமிழனத்தைச் சேர்ந்த இவரது குடும்பத்தினர் தற்போது தென்னாப்பிரிக்காவில் வசித்து வருகிறார்கள். யு-19 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணிக்காக சிறப்பாக செயல்பட்ட இவர் ஆல்ரவுண்டராக இருக்கிறார்.
ஏற்கெனவே, தென்னாப்பிரிக்க அணியில் கேசவ் மகாராஜ், செனுரன் முத்துச்சாமி தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.