17 பந்துகளில் அரைசதம், 37 பந்துகளில் சதம்; வான்கடேவில் அபிஷேக் சர்மா சிக்ஸர் மழை!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா 37 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசி அசத்தினார்.
சதம் விளாசிய மகிழ்ச்சியில் அபிஷேக் சர்மா
சதம் விளாசிய மகிழ்ச்சியில் அபிஷேக் சர்மாபடம் | AP
Published on
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா 37 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசி அசத்தினார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (பிப்ரவரி 2) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடி வருகிறது.

அதிவேக சதம் விளாசிய அபிஷேக் சர்மா

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். சஞ்சு சாம்சன் அதிரடியாக தொடங்கினாலும், 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தார். இங்கிலாந்து அணி வெவ்வேறு பந்துவீச்சாளர்களை பந்துவீச்சில் முயற்சித்தும் பலனளிக்கவில்லை. சிக்ஸர்கள் பறந்த வண்ணமே இருந்தது. 17 பந்துகளில் அரைசதம் விளாசிய அபிஷேக் சர்மா, 37 பந்துகளில் சதம் விளாசி மிரட்டினார். அதில் 5 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் அடங்கும்.

அபிஷேக் சர்மாவின் இந்த சதம் சர்வதேச டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட 2-வது அதிவேக சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.