
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 36ஆவது சதத்தினை நிறைவு செய்தார் ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித்.
இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் 191 பந்துகளில் பவுண்டரி அடித்து சதமடித்தார் ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.
முன்னதாக முதல் டெஸ்ட்டிலும் சதமடித்த ஸ்டீவ் ஸ்மித் அதே போட்டியில் 10,000 டெஸ்ட் ரன்களை கடந்திருந்தார்.
இந்த டெஸ்ட் சதத்துடன் கேப்டனாக இது 17ஆவது சதம். ஆசியாவில் மட்டுமே இது 7ஆவது சதம். கடைசி 5 போட்டிகளில் இது 4ஆவது சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
64 ஓவர்கள் முடிவில் ஆஸி. அணி 252/3 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் இலங்கையை விட 6 ரன்கள் பின்னிலையில் உள்ளது.
அலெக்ஸ் கேரி ஸ்மித்துடன் அதிரடியாக விளையாடி வருகிறார். 105 பந்துகளில் 79 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆசியாவில் அதிக சதங்கள் அடித்த ஆஸி. வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இதற்கு முன்பு ஆலன் பார்டர் 6, ரிக்கி பாண்டிங் 5 சதங்கள் அடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.