திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்சட்டம்-ஒழுங்கு ஐசியு-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்! மு.க. ஸ்டாலின் விமர்சனம்செய்தித்தாள்களில் முதல்வர் புகைப்படம்; விளம்பரத்துக்காக ரூ. 473 கோடி செலவிட்ட கர்நாடகம்: பாஜக குற்றச்சாட்டு!அகல்விளக்கு வங்கிக் கணக்கை முடக்குக! வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்விஐஏஎஸ் அதிகாரிக்கே பாதிப்பு! எதற்கும் பொறுப்பேற்காமல் ஸ்லீப் மோடில் முதல்வர் விஜய்! உதயநிதிகோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!தவெக எம்எல்ஏ மீது மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை! ராஜ்மோகன்சென்னையில் ஒரே நாளில் 36 ரெளடிகள் கைது!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: தவெக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை தேவை! ஜோதிமணிகுரூப் 4 தேர்வுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பம்! நாளை வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்!சபரிமலை பக்தர்களுக்காக சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் அறிவிப்பு!மூன்றாவது மனைவியையும் விவாகரத்து செய்தார் பவன் கல்யாண்!தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் நாளை ஆலோசனை!

ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீராங்கனை பெத் மூனி!

ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீராங்கனையாக பெத் மூனி தேர்வு...

பெத் மூனி

Updated On :

ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீராங்கனையாக பெத் மூனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாதந்தோறும் சிறப்பாக விளையாடிய கிரிக்கெட் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களில் ஒருவருக்கு ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருது வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, ஜனவரி மாதத்தின் சிறந்த ஐசிசி வீராங்கனையாக ஆஸ்திரேலியாவின் பெத் மூனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த விருதுக்கான போட்டியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய மகளிர் அணி வீராங்கனை கொங்கடி த்ரிஷா, மேற்கிந்தியத் தீவுகளின் கரிஷ்மா ராம்ஹரக் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் பெத் மூனி ஆகிய மூவரும் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் பெத் மூனி ஜனவரி மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதைத் தட்டிச் சென்றுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆஷஸ் தொடரில் தனது ஆதிக்கத்தை செலுத்திய பெத் மூனி ஐஐசி சிறந்த வீராங்கனை விருதை வெல்லுவது இதுவே முதல் முறையாகும். மேலும், 2024 டிசம்பரில் ஆல்ரவுண்டர் அன்னாபெல் சதர்லேண்ட் இந்த விருதைப் பெற்ற பிறகு, ஆஸ்திரேலிய வீராங்கனைகள் தொடர்ச்சியாக விருதை வெல்லுவது இரண்டாவது முறையாகும்.

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய பெத் மூனி, டி20 போட்டி தொடரில் 2 அரைசதங்கள் விளாசியதுடன் அதிகபட்சமாக 94* ரன்கள் குவித்தார்.

இவரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை ஒயிட்வாஸ் செய்தது. அதிரடி பேட்டிங் மட்டுமின்றி வழக்கமான விக்கெட் கீப்பரான அலீசா ஹீலிக்கு பதிலாக மூன்று கேட்சுகள் மற்றும் ஒரு ஸ்டெம்பிங் செய்து அசத்தினார். பெத் மூனி மூன்று டி20 போட்டிகளில் 213 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.