
இந்தியன் ப்ரீமியா் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரில் மாா்ச் 22-ஆம் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா-பெங்களூா் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் கொல்கத்தா என்பதால் ஐபிஎல் 2025 இறுதி ஆட்டமும் கொல்கத்தாவில் மே 25-இல் நடைபெறவுள்ளது.
பிசிசிஐ ஆட்சிமன்றக் குழு ஐபிஎல் தொடருக்கான அட்டவணை, தேதிகளை அடுத்த வாரம் அதிகாரபூா்வமாக வெளியிடும் எனத் தெரிகிறது.
ஐபிஎல் தொடரின் சில ஆட்டங்கள் தா்மசாலா, குவஹாட்டியிலும் நடைபெறவுள்ளன. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தா்மசாலாவும், ராஜஸ்தான் அணிக்கு குவஹாட்டியும் இரண்டாவது மைதானமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
5 முறை சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் மாா்ச் 23-இல் சென்னையில் மும்பை இண்டியன்ஸ் அணியை எதிா்கொள்வா். மும்பைக்கு ஹாா்திக்கும், சென்னைக்கு ருதுராஜும் கேப்டன்களாக இருப்பா்.
ஆனால் கொல்கத்தா கேப்டன் யாா் என அறிவிக்கவில்லை. முந்தைய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் பஞ்சாப் அணியில் சோ்ந்துவிட்டாா். பெங்களூரு அணிக்கு ரஜத் பட்டிதாா் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா்.