மனைவியைப் பிரிந்தார் சஹால்..! ரூ.60 கோடி ஜீவனாம்சம் கேட்டாரா தனஸ்ரீ வர்மா?

யுஸ்வேந்திர சஹால் - தனஸ்ரீ வர்மா இருவரும் பரஸ்பர முறையில் விவகாரத்து பெற்று பிரிவதாக முடிவெடுத்துள்ளனர்.
தனஸ்ரீ வர்மாவுடன் யுஸ்வேந்திர சஹால்...
தனஸ்ரீ வர்மாவுடன் யுஸ்வேந்திர சஹால்...
Published on
Updated on
2 min read

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா இருவரும் பரஸ்பர முறையில் விவகாரத்து பெற்று பிரிவதாக முடிவெடுத்துள்ளனர்.

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் யுஸ்வேந்திர சஹால். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தனஸ்ரீ வர்மாவை திருமணம் செய்து கொண்டார். மாடலிங்கில் ஈடுபட்டு வந்த தனஸ்ரீ வர்மா, பாடல் நிகழ்ச்சிகளில் பாடகியாக அறிமுகமாகினார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு தனஸ்ரீக்கு கிடைத்து நடன போட்டிகளிலும் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி கொண்டே இருந்தன. ஆனால் 2023-ஆம் ஆண்டில் சஹாலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிய தனஸ்ரீ வர்மா விவாகரத்து குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்துவந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி பந்துவீச்சாளராக இருந்த சஹால், 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பின்னர் அணியில் இருந்து கலட்டிவிடப்பட்டார். இருப்பினும், 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18 கோடிக்கு அவரை எடுத்தது.

இதையும் படிக்க.. விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில்!

யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா இருவரும் கடந்த 18 மாதங்களாக விவாகரத்து கோரி வந்த நிலையில் மும்பை பாந்த்ரா நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், யுஸ்வேந்திர சாஹலிடம் இருந்து தனஸ்ரீ குடும்பத்தினர் ஜீவனாம்சம் ரூ.60 கோடி கேட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகிவந்தன.

இந்த நிலையில், இந்த ஜீவனாம்சன் குறித்த தகவலை தனஸ்ரீ குடும்பத்தினர் முழுமையாக மறுத்துள்ளனர். இந்தத் தகவல் முழுமையான அடிப்படை ஆதரமற்றவை. மேலும், இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்புவதை கண்டித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தனஸ்ரீ வர்மா குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நாங்கள் இந்த ஜீவனாம்சம் குறித்த தகவலைக் கண்டு மிகவும் அதிருப்தியடைந்துள்ளோம். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் எந்த தொகையையும் கோரவில்லை. இது போன்ற உறுதி செய்யப்படாத தகவல்கள் சம்பந்தப்பட்ட நபரை மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரையும் பாதிக்கும்” எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க... ஐபிஎல்லுக்கு முன் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்புவேன்! -கம்மின்ஸ்

சஹாலின் சொத்து மதிப்பு எவ்வளவு?

கிரிக்கெட்டைத் தவிர, சஹால் வருமான வரித் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றுகிறார். அவருக்கு மாதச் சம்பளம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை இருக்கும் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. யுஸ்வேந்திர சாஹல் குருகிராமில் ஒரு வீடு கட்டியுள்ளார். அதன் மதிப்பு சுமார் ரூ.25 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ், போர்ஷே, மெர்சிடிஸ் பென்ஸ், லம்போர்கினி சென்டெனாரியோ கார்களை வைத்துள்ளார். கிரிக்கெட்டைத் தாண்டி, யுஸ்வேந்திர சஹால் விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் சம்பாதித்து வருகிறார். அவரின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.45 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com