எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

விக்கெட் கீப்பருக்கு கடும் போட்டி: கே.எல்.ராகுலுக்கு ஓய்வளிக்க முடிவா?

இங்கிலாந்து தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image

ரிஷப் பந்த்| கேஎல்.ராகுல் | சஞ்சு சாம்சன்

Updated On :10 ஜனவரி 2025, 4:01 pm IST

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பருக்கு கடும் போட்டி நிலவும் நிலையில், முன்னணி விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலுக்கு இங்கிலாந்து தொடரில் ஓய்வளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜனவரி 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடவிருக்கிறது. இந்தத் தொடரில் 5 டி20 போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி விளையாடவிருக்கிறது.

இங்கிலாந்து தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணிகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், வருகிற ஞாயிற்றுக்கிழமைக்குள் இரு தொடருக்கான அணிகள் அறிவிக்கப்படவிருப்பதாக பிசிசிஐயின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான கே.எல்.ராகுலுக்கு இங்கிலாந்துக்கு தொடரில் இருந்து ஓய்வளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இங்கிலாந்து தொடருக்கான அணியில் ராகுலுக்கு ஓய்வளிக்கப்படும் பட்சத்தில் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் அவர் இடம்பிடிக்க வாய்ப்பிருக்கிறது.மேலும், விக்கெட் கீப்பருக்கான போட்டியில் டெஸ்ட் கீப்பர் ரிஷப் பந்த், டி20 கீப்பர் சஞ்சு சாம்சன் ஆகியோரும் களத்தில் இருக்கின்றனர்.

எவ்வாறாயினும், யார் தேர்வு செய்யப்படவுள்ளனர் என்ற குழப்பம் அனைவர் மத்தியிலும் இருக்கிறது. முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் சரியாக சோபிக்காத ராகுல் 10 இன்னிங்ஸ்களில் வெறும் 276 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ஏற்கனவே, விஜய் ஹசாரே தொடரில் கர்நாடக அணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் ராகுல். இந்தத் தொடருக்கான காலிறுதிப் போட்டிகள் இந்த வாரத்தில் நடைபெறவிருக்கின்றன.

ஆஸ்திரேலிய தொடரை இழந்த நிலையில், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியது போல உள்ளூர் போட்டிகளான ரஞ்சி தொடரில் கேஎல். ராகுல் விளையாடுவாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.