நவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது: பிரதீகா ராவல்

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்துள்ளதாக இந்திய வீராங்கனை பிரதீகா ராவல் தெரிவித்துள்ளார்.

பிரதீகா ராவல் - படம் | பிசிசிஐ

Published On :10 ஜனவரி 2025, 9:50 pm IST

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்துள்ளதாக இந்திய வீராங்கனை பிரதீகா ராவல் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராஜ்காட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரதீகா ராவல் 96 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.

நல்ல தொடக்கம்

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளதாக பிரதீகா ராவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இன்றையப் போட்டியில் நான் மிகவும் சிரமமின்றி விளையாடினேன். கேப்டன் ஸ்மிருதி மந்தனா என்னுடன் களத்தில் இருந்தது மிகுந்த உதவியாக இருந்தது. அவர் விளையாடுவதை மறுமுனையில் இருந்து ரசித்து பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் சிறப்பாக விளையாடியது என் மீது அழுத்தம் ஏற்படாமல் இருக்க உதவியது. எங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. அதனை அப்படியே அடுத்த போட்டிகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். ஆட்டத்தின் இறுதியில் தேஜல் நன்றாக விளையாடினார். ஒவ்வொரு போட்டியிலும் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்கிறேன் என்றார்.

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (ஜனவரி 12) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.