பாட் கம்மின்ஸ்தான் தலைசிறந்த கேப்டன்..! தினேஷ் கார்த்திக் புகழாரம்!

உலகத்திலேயே சிறந்த கேப்டன் என்றால் அது கம்மின்ஸ்தான் என தினேஷ் கார்த்திக் கருத்து கூறியுள்ளார்.
ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ்
ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் படம்: ஏபி
Published on
Updated on
1 min read

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தற்போதைக்கு உலகத்திலேயே சிறந்த கேப்டன் என்றால் அது பாட் கம்மின்ஸ்தான் எனக் கூறியுள்ளார்.

ரோஹித் சர்மா டி20 உலகக் கோப்பையை வென்றாலும் பாட் கம்மின்ஸ்ஸின் சாதனையும் அவரது மனப்பாங்கும் பிடித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

2021இல் பாட் கம்மின்ஸ் கேப்டன் பொறுப்பை ஏற்றார். அதிலிருந்து தொடர்சியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 வெற்றி, ஒருநாள் உலகக் கோப்பை 2023 வெற்றி, ஆஷஸ் தொடர் தக்கவைப்பு, பார்டர் கவாஸ்கர் தொடர் 2024/25 வெற்றி என அனைத்து தொடர்களையும் வென்று அசத்தியுள்ளார்.

பிஜிடி தொடரில் 25 விக்கெட்டுகள், 159 ரன்கள் எடுத்து அசத்தினார். கம்மின்ஸ்தான் மிகவும் ஆக்ரோஷமான கிரிக்கெட்டர். ஆனால், அவர் தனது ஆக்ரோஷத்தை வார்த்தைகளில் கொண்டாட்டத்தில் வெளிக்காட்டமாட்டார் எனப் புகழ்ந்து பேசியுள்ளது இந்தியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கம்மின்ஸ் குறித்து தினேஷ் கார்த்திக் கூறியதாவது:

என்னுடைய கருத்துபடி, பாட் கம்மின்ஸ் மிகவும் தீவிரமான கிரிக்கெட் வீரராக இருக்கிரார். வார்த்தைகள் மூலமாகவே அல்லது ஆக்ரோஷத்தின் மூலமாகவே தனது ஆதிக்கத்தை நிரூபிக்க நினைப்பதில்லை. மாறாக, அவரது உடல்மொழியில் இருந்து அதை வெளிக்காட்டுகிறார். போட்டிக்கு முன்பாகவும் பின்பாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் எப்படி சந்திக்கிறார் என்பது மிகவும் கவனிக்கதக்கதாக இருக்கிறது.

கம்மின்ஸ்ஸின் இயல்பான தலைமைப் பண்பு அவர் அணியை வழி நடத்தும் விதத்தைப் பார்த்து சொல்கிறேன் தற்போதைக்கு சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த கேப்டனாக பாட் கமின்ஸே இருக்கிறார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் பிப்.19ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. கணுக்கால் காயம் காரணமாக அவர் இதில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com