நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; முகமது ஷமி அணியில் சேர்ப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜனவரி 11) அறிவித்துள்ளது.

முகமது ஷமி - படம் | பிசிசிஐ

Published On :11 ஜனவரி 2025, 9:26 pm IST

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜனவரி 11) அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வருகிற ஜனவரி 22 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜனவரி 11) அறிவித்துள்ளது.

இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் கேப்டனாக வழிநடத்துகிறார். துணைக் கேப்டனாக அக்‌ஷர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக கடந்த 14 மாதங்களாக இந்திய அணியில் இடம்பெறாமலிருந்த வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி அணிக்குத் திரும்பியுள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இடம்பெற்ற நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்சித் ராணா இருவரும் இங்கிலாந்துக்கு எதிரான இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி விவரம்

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ரிங்கு சிங், நிதீஷ் குமார் ரெட்டி, அக்‌ஷர் படேல் (துணைக் கேப்டன்), ஹர்சித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜுரெல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.