5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

மகளிர் உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி சூப்பர் 6 சுற்றுக்கு இந்தியா தகுதி!

மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இலங்கையை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றது.

News image

படம் | ஐசிசி

Updated On :23 ஜனவரி 2025, 4:14 pm IST

மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இலங்கையை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றது.

19 வயதுட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.

இந்தியா - 118/9

முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை கொங்கடி த்ரிஷாவை தவிர்த்து, மற்ற வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. சிறப்பாக விளையாடிய கொங்கடி த்ரிஷா 44 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஒரு ரன்னில் அரைசதம் குவிக்கத் தவறினார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, மிதிலா வினோத் 16 ரன்களும், ஜோஷிதா 14 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் பிரமுடி மேத்சரா, லிமன்சா திலகரத்ண, அசெனி தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ராஷ்மிகா, சமோடி மற்றும் மனூடி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

சூப்பர் 6 சுற்றுக்குத் தகுதி

119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த அணியில் ராஷ்மிகா செவ்வந்தி அதிகபட்சமாக 15 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்தியா தரப்பில் ஷப்னம், ஜோஷிதா மற்றும் பருணிகா சிசோடியா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆயுஷி சுக்லா மற்றும் வைஷ்ணவி சர்மா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொங்கடி த்ரிஷாவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப் ஏ பிரிவிலிருந்து சூப்பர் 6 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.