இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா பாராட்டியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்று (ஜனவரி 22) தொடங்கியது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்கரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இதையும் படிக்க: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
ஆட்டத்தின் போக்கை மாற்றுபவர்
அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய வருண் சக்கரவர்த்தியை தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

அபிஷேக் சர்மா - படம் | பிடிஐ
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த சில டி20 தொடர்களை எடுத்துக் கொள்ளுங்கள். இந்திய அணிக்கு வருண் சக்கரவர்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றுபவராக இருந்துள்ளார். டி20 போட்டிகளில் பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்கள் இருப்பது வழக்கம். அந்த மாதிரியான சூழலில் அணியில் முக்கியமான பந்துவீச்சாளரை நம்பியிருப்பது மிகவும் முக்கியம். வருண் சக்கரவர்த்திக்கு எதிராக சிறப்பாக விளையாட எதிரணியினர் சிரமப்படுகின்றனர். அவர் மட்டுமல்லாது, ரவி பிஷ்னோய் மற்றும் அக்ஷர் படேலும் சிறப்பாக பந்துவீசினர்.
இதையும் படிக்க: தோல்விக்கு காரணம் என்ன? விளக்கமளித்த ஜோஸ் பட்லர்!
ஒரு பேட்ஸ்மேனாக 4 - 5 இன்னிங்ஸ்களில் சரியாக விளையாடவில்லை என்றால், அவரது மனநிலை எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள். ஆனால், அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இருவரும் வீரர்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு ஆதரவளிக்கின்றனர். நான் சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்ற போதிலும், உங்களால் அணிக்காக போட்டியை வென்று கொடுக்க முடியும் என எனக்கு கௌதம் கம்பீரும், சூர்யகுமார் யாதவும் ஆதரவளித்தனர் என்றார்.
நேற்றையப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் இருவரின் விக்கெட்டுகளையும் வருண் சக்கரவர்த்தி ஒரே ஓவரில் வீழ்த்தியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரோஹித், கோலியால் ஜெய்ஸ்வாலின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறதா? யுவராஜ் சிங் கூறுவதென்ன?

சர்வதேசப் போட்டிகளில் ரோஹித் சர்மா - விராட் கோலி இணை புதிய சாதனை!

ரோஹித் சர்மா ஓய்வு... லார்ட்ஸ் போட்டிதான் கடைசி ஆட்டமா?

2-வது டி20: அபிஷேக் சர்மா அசத்தல்; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



