யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

3-வது டி20: பிளேயிங் லெவனில் முகமது ஷமி இடம்பெறுவாரா?

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முகமது ஷமி இடம்பெறுவாரா என்பது குறித்து...

News image
முகமது ஷமி (கோப்புப் படம்)
Updated On :28 ஜனவரி 2025, 12:26 pm

DIN

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முகமது ஷமி இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்திலும், இரண்டாவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெற்றது. இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

பிளேயிங் லெவனில் முகமது ஷமி இடம்பெறுவாரா?

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின்போது, முகமது ஷமிக்கு காயம் ஏற்பட்டது. அதன் பின், அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை. 14 மாதங்களுக்குப் பிறகு இங்கிலாந்து தொடரின் மூலம் முகமது ஷமி இந்திய அணிக்குத் திரும்பினார். இருப்பினும், முதல் இரண்டு போட்டிகளில் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.

இந்திய அணி வீரர்களுடன் இணைந்து பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபடும் முகமது ஷமி, போட்டிகளில் களமிறக்கப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. சாம்பியன்ஸ் டிராபி தொடரை மனதில் வைத்து முகமது ஷமியை, இந்திய அணி நிர்வாகம் களமிறக்கவில்லையா என்ற கேள்வியும் எழுந்தது.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலையில் உள்ளது. தொடரை வெல்வதற்கான முக்கியமான போட்டி என்பதால், இன்றையப் போட்டியில் முகமது ஷமி பிளேயிங் லெவனில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி நிர்வாகம் முகமது ஷமியை பிளேயிங் லெவனில் களமிறக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.