ஸ்டீவ் ஸ்மித் மீது காதலா? அஸ்வினின் மனைவி கிண்டல்!

ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் மீதான அஸ்வினின் ஆர்வத்தை கிண்டல் செய்த அவரது மனைவியின் பேச்சு வைரல்.
ஸ்டீவ் ஸ்மித், ஆர். அஸ்வின்
ஸ்டீவ் ஸ்மித், ஆர். அஸ்வின்படங்கள்: ஏபி
Published on
Updated on
1 min read

ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை காதலிக்கிறீர்களா என தன்னை அவரது மனைவி பிரீத்தி நாராயணன் கிண்டல் செய்தது குறித்து அஸ்வின் பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் தலைசிறந்த பேட்டராக இருக்கிறார். அதேசமயம் தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின் நுட்பமான சுழல்பந்து வீச்சாளராக செயல்பட்டுள்ளார்.

சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த அஸ்வின் டெஸ்ட்டில் ஸ்டீவ் ஸ்மித்தை சில முறை தொடர்ச்சியாக விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

2013 தொடரில் ஸ்மித் 355 பந்துகளில் 216 ரன்கள் எடுத்தார். இந்தத் தொடரில் ஸ்மித்தை அஸ்வின் ஒருமுறை மட்டுமே ஆட்டமிழக்க செய்தார். அடுத்ததாக 3 தொடரில் ஸ்மித்தை 7 முறை ஆட்டமிழக்க செய்து 218 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தினார்.

இது குறித்து பெங்களூருவின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அஸ்வின் பேசியதாவது:

ஸ்டீவ் ஸ்மித் விடியோக்களை எத்தனை முறை பார்த்தேன் என எனக்கு நியாபகம் இல்லை. ஸ்மித் பேட்டிங்கை மிகவும் கூர்ந்து கவனித்தேன். அவரது கிரீப் எப்படி பிடிக்கிறார் என்பதை ஜூம் செய்தெல்லாம் பார்த்தேன்.

இதனால் எனது மனைவி, குழந்தைகளிடம் நேரம் செலவிட முடியவில்லை. அதனால், எனது மனைவி என்னிடம் ‘நீ ஸ்மித்தை காதலிக்கிறாயா?’ எனக் கேட்டார்.

ஸ்மித் மிகவும் வித்தியாசமான பேட்டிங் தொழில்நுட்பத்துடன் விளையாடுபவர். எனது கடின உழைப்பினால் அவரை தொந்தரவு செய்ய முடிந்தது. பந்தினை எகிறாமல் வீசினேன். அவர் அதைக் கணிக்காமல் அடித்து ஸ்லிப்பில் சில முறை ஆட்டமிழந்தார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com