126 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை..! 820 ரன்கள் குவித்து சாதனை!

கவுண்டி கிரிக்கெட்டில் நிகழ்ந்த வரலாற்றுச் சாதனை குறித்து...
4 Surrey players who scored centuries.
சதமடித்த 4 சர்ரே அணி வீரர்கள். படம்: எக்ஸ் / சர்ரே கிரிக்கெட்
Published on
Updated on
1 min read

கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணி 820 ரன்கள் குவித்து வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெறும் முதல்தர கிரிக்கெட் போட்டியான கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணியும் துர்ஹம் அணியும் கடந்த ஜூன் 29 முதல் விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் போட்டிங் செய்த சர்ரே அணி 820/9 ரன்கள் குவித்தது. இந்த அணியின் தொடக்க வீரர் டோம் சிப்லி 305 ரன்கள் குவித்து அசத்தினார்.

இந்த அணியில் சாம் கர்ரண், டான் லாரன்ஸ், வில் ஜாக்ஸ் ஆகிய மூவரும் அவர்கள் பங்கிற்கு சதம் அடித்து அசத்தினார்கள். சர்ரே அணி முதல் இன்னிக்ஸில் 161.3 ஓவர்களில் 820/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

அடுத்ததாக துர்ஹம் அணி 33 ஓவர்களில் 62/1 ரன்கள் எடுத்துள்ளது.

126 ஆண்டு வரலாற்றில் சர்ரே அணியின் அதிகபட்ச இலக்கு (820) இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக 811 ரன்கள் எடுத்திருந்தது.

கவுண்டி கிரிக்கெட்டில் யார்க்‌ஷ்ரி அணி 1986ஆம் ஆண்டு 887 ரன்கள் அடித்ததுதான் இதுவரை முறியடிக்கப்படாமல் முதலிடத்தில் இருக்கிறது. சர்ரே அணி இந்த வரிசையில் 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

வழக்கமாக விளையாடும் டியூக் பந்து இல்லாமல் இந்தமுறை கூக்கபுரா பந்தில் விளையாடினார்கள். ஏனெனில் அது ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும்போது உதவும் என்ற எண்ணத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

லண்டல் வெய்யிலில் இந்தப் பந்து பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியை அளித்துவிட்டது.

Summary

A remarkable feat at the Kia Oval! 🪶820/9 is our new highest team total in a first-class fixture. The previous best was 811 against Somerset, at the same ground, 126 years ago.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com