அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்ட ஹாரி ப்ரூக், ஜேமி ஸ்மித்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஹாரி ப்ரூக் மற்றும் ஜேமி ஸ்மித் இருவரும் தங்களது அதிரடியான ஆட்டத்தால் இங்கிலாந்தை சரிவிலிருந்து மீட்டனர்.
jamie smith
சதம் விளாசிய மகிழ்ச்சியில் ஜேமி ஸ்மித்படம் | AP
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஹாரி ப்ரூக் மற்றும் ஜேமி ஸ்மித் இருவரும் தங்களது அதிரடியான ஆட்டத்தால் இங்கிலாந்தை சரிவிலிருந்து மீட்டனர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில், 587 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இந்திய அணியில் கேப்டன் ஷுப்மன் கில் அதிகபட்சமாக 269 ரன்கள் எடுத்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து, ரவீந்திர ஜடேஜா 89 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களும் எடுத்தனர்.

ஹாரி ப்ரூக், ஜேமி ஸ்மித் அதிரடி

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பென் டக்கெட், ஆலி போப் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மூவரும் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். ஸாக் கிராலி 19 ரன்களும், ஜோ ரூட் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்த நிலையில், ஹாரி ப்ரூக் மற்றும் ஜேமி ஸ்மித் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர். சிறப்பாக விளையாடிய ஜேமி ஸ்மித் 80 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.

உணவு இடைவேளையின்போது, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் எடுத்துள்ளது. ஜேமி ஸ்மித் 102 ரன்களுடனும் (14 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), ஹாரி ப்ரூக் 91 ரன்களுடனும் (11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) களத்தில் உள்ளனர்.

உணவு இடைவேளையின்போது, இங்கிலாந்து அணி இந்தியாவைக் காட்டிலும் 338 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Harry Brook and Jamie Smith both rescued England from a slump with their impressive performances in the second Test against India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com