
இலங்கைக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றி வங்கதேச அணி வரலாறு படைத்துள்ளது.
வங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் ஏற்கனவே நிறைவடைந்துவிட்ட நிலையில், நேற்றுடன் டி20 தொடர் நிறைவடைந்தது.
கொழும்புவில் நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கையை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், டி20 தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த வெற்றியின் மூலம், இலங்கை மண்ணில் முதல் முறையாக டி20 தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது வங்கதேசம். இதற்கு முன்பாக, இலங்கை மண்ணில் வங்கதேசம் தொடரை வென்றதில்லை.
மூன்றாவது போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மெஹிதி ஹாசனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருதினை லிட்டன் தாஸ் வென்றார்.
Bangladesh team has created history by winning the T20 series against Sri Lanka.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.