கே.எல்.ராகுல் இங்கிலாந்தில் வெற்றிகரமாக செயல்பட காரணம் என்ன? ரவி சாஸ்திரி பதில்!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் இங்கிலாந்தில் சிறப்பாக செயல்படுவதற்கான காரணத்தை ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
kl rahul
கே.எல்.ராகுல்படம் | AP
Published on
Updated on
1 min read

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் இங்கிலாந்தில் சிறப்பாக செயல்படுவதற்கான காரணத்தை இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் இதுவரையில் 3 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நான்காவது போட்டி மான்செஸ்டரில் வருகிற ஜூலை 23 முதல் தொடங்குகிறது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரை விளையாடியுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் அவர் 375 ரன்கள் எடுத்துள்ளார். அதில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடங்கும். இந்திய அணிக்காக பேட்டிங்கில் தனது சிறப்பான பங்களிப்பை கே.எல்.ராகுல் வழங்கி வருகிறார்.

ரவி சாஸ்திரி கூறுவதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்தில் கே.எல்.ராகுல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஐசிசி ரிவ்யூவில் பேசியதாவது: அதிக திறமைகள் இருந்தும் கே.எல்.ராகுலிடமிருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படாதது ரசிகர்களை எரிச்சலடையச் செய்தது. ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுலின் சிறப்பான ஆட்டத்தை பார்த்து வருகிறோம். கே.எல்.ராகுல் அவரது ஆட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதை என்னால் பார்க்க முடிகிறது. அவரது முன்னங்கால் நகர்வு மற்றும் பந்தினை தடுத்து ஆடும் விதத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார். அதனால், அவரால் சிறப்பாக ஷாட்டுகளை விளையாட முடிகிறது.

டெஸ்ட் போட்டிகளில் கே.எல்.ராகுல் அவருடைய சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். அவரால் அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஜொலிக்க முடியும். இந்தியாவிலும் நிறைய டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருப்பதால், அவரிடமிருந்து நிறைய சதங்கள் வரும் என்பதை நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.

இந்திய அணிக்காக இதுவரை 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கே.எல்.ராகுல், 3632 ரன்கள் குவித்துள்ளார். அதில் 10 சதங்கள் மற்றும் 18 அரைசதங்கள் அடங்கும். அவரது சராசரி 35.3 ஆக உள்ளது.

4 சதங்களுடன் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தில் அதிக சதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் கே.எல்.ராகுல் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த வரிசையில் 6 சதங்களுடன் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Ravi Shastri has said that KL Rahul is performing well in England because he has brought a change in his game.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com